காற்று மாசடைவதில் இந்தியாவில் மட்டும் 5 நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
aqi.in – இன் நேரடி தரவுகளின்படி, நவம்பர் 14 இன்று உலக அளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. தரவுகளின்படி, தேசிய தலைநகரில் காற்றின் தரம் ‘அபாயகரமான’ பிரிவான AQI 451 ஆக இருக்கிறது.
உலகில் மிகவும் மாசுபட்ட முதல் 10 நகரங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன :
டெல்லியை அடுத்து ஹரியானாவின் இரண்டு நகரங்கள் மோசமான காற்று மாசுபாடு காரணமாக தரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன: சிர்சா மற்றும் ஃபரிதாபாத். சிர்சாவின் காற்றின் தரம் ‘கடுமையான’ நிலையை எட்டி அதன் தரம் AQI 396 ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து ஃபரிதாபாத் காற்றின் தரம் சற்று உயர்ந்து AQI 386 ஆக இருக்கிறது.
மதியம் 2 மணிக்கு aqi.in -ன் நேரலை தரவுகளின்படி, உத்தரபிரதேசத்தில் உள்ள ஹபூர் நகரம் 368 AQI உடன் நான்காவது இடத்தில் இருந்தது. சீனாவின் Suihua நகரம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் அந்த நகரத்தின் காற்றின் தரம் AQI 368 ஆகப் பதிவானது. இரண்டு நகரங்களும் ‘கடுமையான’ பிரிவில் விழும் பட்டியலில் இருந்தது.
அடுத்த ஐந்து நகரங்களுக்குச் சென்றால், அவற்றில் மூன்று இந்தியாவைச் சேர்ந்தவை, ஒன்று சீனாவைச் சேர்ந்தது.மற்றொன்று பாகிஸ்தானைச் சேர்ந்தது.
6வது இடத்தில் உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரம் உள்ளது. அதன் தரம் AQI 364 ஆகவும், ஹரியானாவில் உள்ள ரோஹ்தக் AQI 355 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் AQI 352 உடன் எட்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஹரியானாவின் குருகிராம் AQI 351 என்ற தரத்துடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. பத்தாவது இடத்தில் சீனாவின் Daqing நகரம் AQI 346 உடன் ‘கடுமையான மாசு ‘ வகை காற்றைப் பதிவு செய்தது. இது மதியம் 2 மணிக்கு aqi.in -ன் தரவுகள் மூலமாக பெறப்பட்டது.