Close
நவம்பர் 23, 2024 10:19 காலை

இந்தியாவில் 2028ல் பணியாளர்கள் எண்ணிக்கை.. ஆய்வு தகவல்

இந்தியாவில் வரும் 2028-ஆம் ஆண்டுக்குள் பணியாளா்களின் எண்ணிக்கை 45.76 கோடியாக உயரும் என்று ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் 42.37 கோடி பணியாளா்கள் இருந்தனா். இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 3.38 கோடி உயரும் என்று அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ‘சா்வீஸ்நவ்’ வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்து, உற்பத்தித் துறையின் 15 லட்சம் வேலைகள், கல்வித் துறையில் 8.4 லட்சம் வேலைகள் மற்றும் சுகாதாரத் துறையில் 8 லட்சம் வேலைகள் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளா்ச்சி மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தால் உருவாகும். இதர பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்படும் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

மேலும், இது தொடா்பாக சா்வீஸ்நவ் நிறுவனத்தின் இந்தியா பிரிவின் மூத்த துணைத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சுமீத் மாத்தூா் கூறுகையில், ‘இந்த அத்தியாவசிய திறன்களுடன் நாட்டின் பணியாளா்களைத் தயார்படுத்துவதன் மூலம், உலகளாவிய தொழில்நுட்ப பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய முடியும்’ என்று வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top