தனிநபர் வளர்ச்சி குறியீட்டில் அமெரிக்காவையே தமிழ்நாடு பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட மிகவும் முன்னேறி உள்ளன. குறிப்பாக சோசலிசம் மற்றும் முதலாளித்துவம் இரண்டிலும் தென்மாநிலங்கள் தான் முன்னணியில் உள்ளன.
இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு விகிதமும் குறைந்த வறுமையும் கேரளாவில் உள்ளது. பல வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மற்ற தென்னிந்திய மாநிலங்களும் இந்த அளவீடுகளில் முன்னணியில் உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக கர்நாடகா மாறி உள்ளது. தவிர கர்நாடகம் ஐஐஎஸ்சி மற்றும் இஸ்ரோ போன்ற முதன்மையான நிறுவனங்களுக்கான விண்வெளி மையமாகவும், தாயகமாகவும் உள்ளது.
இந்தியா முழுவதிலுமிருந்து பலதரப்பட்ட மக்கள் பெங்களூரில் பணிபுரிவதைக் காணலாம். ஆட்டோமொபைல் மற்றும் தோல் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்திய அரசு சேவைகள், பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளிலும் தமிழ்நாடு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.
பள்ளிகளில் இலவச மதிய உணவு போன்ற மிகவும் சிறப்பான நலத்திட்டங்களில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூருக்கு அடுத்தபடியாக தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரம் ஐடி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இனியும் சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்:
அனைத்து தென்னிந்திய மாநிலங்களும் தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.75குறியீடுக்கு மேல் உள்ளது. தனிநபர் வருமானத்தில் 5 தென்னிந்திய மாநிலங்களில் 4 மகாராஷ்டிராவை விட முந்தி முன்னணியில் உள்ளன.
அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் தனிநபர் 2.5 என்ற குறியீடுக்கு மேல் உள்ளது. தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை 3L+ என்ற குறியீடுக்கும் அதிகமான தனிநபர் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளன.
குறிப்பாக அடிப்படை கல்வி, உயர்கல்வி, மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வி, மக்கள் நலத்திட்டங்கள், ரோடு கட்டமைப்புகள், கிராம வளர்ச்சி, தனிநபர் வருவாய் குறியீடு, சுகாதார மேம்பாடு, சுத்தமான குடிநீர், சுத்தமான காற்று போன்ற பல விஷயங்களில் அமெரிக்கா மாநிலங்களை கூட தமிழகம் பின்னுக்கு தள்ளியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.