Close
நவம்பர் 21, 2024 8:47 காலை

பிரிக்ஸ் மாநாட்டிற்கு செல்லும் முன் பிரதமர் மோடி செய்த பெரும் சாதனை..!

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பாரத தேசம் சரித்திர சாதனை ஒன்றினை செய்திருக்கின்றது.

இச்சோதனை வெள்ளிகிழமை ஐப்பசி பௌர்ணமி அன்று நடத்தப்பட்டிருக்கின்றது, நேற்று மாலை முழு சோதனையின் முடிவும் அறிவிக்கபட்டிருக்கின்றது.

அதாவது உலகின் அதிவேக ஏவுகணை எனும் ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணையினை இந்தியா பரிசோதனை செய்திருக்கின்றது. இந்த சோதனையில் அது சரியாக இலக்கை தாக்கியிருக்கின்றது.

இவ்வகை ஏவுகணைகள் ஒலியினை விட ஐந்து மடங்கு வேகமாக பாயக்கூடியவை. இந்த ஏவுகணைகள் அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும் உண்டு. உக்ரைன் போரில் ரஷ்யாவின் பிரதான துருப்பு சீட்டு இதுதான். ‘கின்சொல்” எனும் அந்த அதிவேக ஏவுகணைகள் உக்ரைனுக்கு மிரட்டலை கொடுத்தன. ஆனால் ரஷ்யா அதனை அதிக அளவு தயாரிக்கவில்லை. அடுத்து தயாரிக்கும் முன் பொருளாதார தடை விழுந்து உதிரிபாகம் கிடைக்காத நிலையில் ரஷ்யா இப்போது திணறுகின்றது.

இவ்வகை ஏவுகணைகள் சீனாவிடம் உண்டு. அல்லது அப்படி ஒரு வகை ஏவுகணை தன்னிடம் இருப்பதாக சீனா சொல்லி திரிகின்றது என்பது வேறு விஷயம். எனினும் அமெரிக்காவிடம் இருந்து களவாடிய தொழில்நுட்பம் மூலம் அதை செய்து பார்த்தார்கள் என்பது ராணுவ செய்தி.

இந்த அதிவேக ஏவுகணைகள் அந்த மூன்று நாடுகளிடமே தான் உண்டு. இப்போது இந்த வரிசையில் இந்தியா இணைந்து விட்டது. இது சரித்திர வெற்றி, காரணம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உலகில் அறிமுகமானதே ஐந்து ஆண்டுக்குள் தான். அதற்குள் இந்தியா அந்த தொழில் நுட்பத்தை அடைந்து சாதித்திருக்கின்றது.

இதனால் சீனா இந்தியாவினை மிரட்டிய ஒரு துருப்பு சீட்டும் அடிபட்டு போகின்றது, இனி சீனாவின் தலைநகரை இந்தியாவினால் ஒருசில நிமிடங்களில்    தொடமுடியும்.

ஒலியினை விட ஐந்துமடங்கு வேகம் என்பது சிக்கலானது. இதை இயக்கும் எந்திரம் வேண்டும், கடும் காற்று உராய்வில் தீ பிடிக்காமல் இருக்க உலோக நுட்பம் வேண்டும். ஆனால் அது எளிதான உலோகமாக இருக்க வேண்டும்.

இன்னும் இது துல்லியமான செயற்கைகோள் வழிகாட்டல் அதுவும் மின்னல் வேக வழிகாட்டல் என பல உண்டு. இதெல்லாம் மாபெரும் விஞ்ஞான சாதனை. செயற்கைகோள், ஏவுகணை எந்திரம், அதன் எரிபொருள், மிக பலமான உலோகம் என என்னவெல்லாமோ கலந்தது. ஒலியினை விட ஐந்துமடங்கு வேகமாக‌ செல்லும் ஏவுகணையினை தயாரிக்க இந்த தொழில்நுட்பம் மட்டுமல்ல பெரும் பணமும் அவசியம்.

மோடி அரசு அந்த பெரும் சாதனையினை செய்திருக்கின்றது. உலகம் சத்தமில்லாமல் அதிர்ந்து கிடக்கின்றது, வல்லரசுகள் வாய்மூடி நிற்கின்றன. இந்தியா இனி அசைக்க முடியாத இடத்துக்கு சென்று விட்டது என்பதால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன், போன்ற குட்டி நாடுகள் மிரண்டு கிடக்கின்றன‌. சரி, வெள்ளிகிழமை செய்த சோதனையினை ஏன் இன்று அறிவித்தார்கள்?

இப்போது தான் மோடி பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரேசில் செல்கின்றார், அவர் பிரிக்ஸ் மாநாட்டிற்கு செல்லும் போது, இந்த ஏவுகணை சோதனை அத்தனை பேரையும் சென்றடைந்திருக்கும். அங்கே அமெரிக்கா, சீனா அதிபர்களிடையே “எங்களிடமும் இனி ஹைப்பர்சோனிக் உண்டு” என புன்னகைத்தபடி மோடி நிற்பார்.

இதெல்லாம் சர்வதேச அரசியல். பிரேசிலில் சீன அதிபரை மோடி சந்திக்கும் நேரம் “எங்களிடம் இனி உங்கள் ஆட்டம் மிரட்டல் செல்லாது, சீனாவுக்கு எந்த வகையிலும் இந்தியா குறையவில்லை” என மவுனமாக சொல்லும் அரசியல்.

ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்திருக்கின்றார். இதனால் உலகின் மிகபலமான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி, எல்லாமும் எங்களுக்கு சாத்தியம் என சரித்திர சாதனை செய்திருக்கின்றது மோடி அரசு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top