பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடி அவரிடம் இருந்து 43.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுரேஷ் அச்சுதன் என்பவர் டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், பல தவணைகளில் பணத்தை பெற்று ஏமாற்றியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதில் ஒரு வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது அந்த வங்கிக்கணக்கு முன்ட்கா பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் பெயரில் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.
அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரைக் கண்டுபிடித்து விசாரணையை துரிதபடுத்தினார்கள். இதில் மோசடியில் ஈடுபட்ட பங் சென்ஜின் என்ற சீன நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து ரூ.100 கோடி மோசடி செய்தது தெரிவந்தது. மேலும், அவர் மீது ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 17 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.