Close
நவம்பர் 21, 2024 6:20 காலை

தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவிகளின் முடியை தாறுமாறாக கத்தரித்த பெண் வார்டன்..!

முடி வெட்டப்பட்ட மாணவிகள்

ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை பள்ளியின் ஹாஸ்டல் வார்டன் கத்தரிக்கோலால் வெட்டி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாஸ்டல் வார்டன் மீது நடவடிக்கை பாயுமா என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கேஜிபிவி (கதிரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா) என்ற மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளில் சுமார் 15 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஹாஸ்டல் வார்டன் பிரசன்ன குமாரி, மாணவிகளை சுமார் 2 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தார். அதிலும் ஆத்திரம் அடங்காத அவர் கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு ஆவேசமாக வந்துள்ளார்.

பயத்தில் நின்ற மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து தன் கைக்கு வந்தபடி வார்டன் பிரசன்னகுமாரி வெட்டி எறிந்துள்ளார். இதில் மாணவிகளின் தளி அலங்கோலமாக காட்சியளித்துள்ளது. இதனால் மாணவிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றனர்.

பின்னர் கோபம் அடங்கிய வார்டானுக்கு தான் செய்தது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்தார். இருப்பினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மாணவிகளிடம் இது தொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வார்டன் மாணவிகளை மிரட்டி இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது வெளியில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த சம்பவத்தால் கொந்தளித்துப் போய் உள்ளனர்.

அந்த வார்டனை பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top