Close
நவம்பர் 21, 2024 10:17 காலை

“உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் பண்றோம்” போலி போலீஸ் நிஜ போலீசை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்..!

சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டிய மும்பை போலி அதிகாரி

சமீப காலமாக டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.இப்போது ஒரு போலீஸ் அதிகாரியையே டூப்ளிகேட் போலீஸ் டிஜிட்டல் அரெஸ்ட் செய்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதஹு குறித்த செய்தியை பார்க்கலாம் வாங்க.

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. மோசடி பேர்வழிகள் செல்போன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தங்களை சிபிஐ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் அலலது சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்வார்கள்.

எந்த திகாரி என்று பொய் சொல்ல உள்ளார்களோ அந்த அதிகாரிகள் போல மிடுக்காக அந்த உடையில் இருப்பார்கள். போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, வரிஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அப்பாவி மக்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக மிரட்டுவார்கள். அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பெரும் தொகையை கேட்பார்கள்.

டிஜிட்டல் அரெஸ்ட் விவகாரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.4.70 லட்சம் கோடிக்கும் அதிகமாக பணத்தை மோசடியாக பறித்துள்ளனர்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு அரசு அமைப்பும் செல்போனில் பொதுமக்களை தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அனைத்து மாநில காவல் துறையினரும் இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கேரள மாநிலம், திருச்சூர் நகர சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியின் செல்போனுக்கு ஒரு வீடியோ கால் வந்தது. அந்த அழைப்பின் காலை எடுத்து போலீஸ் அதிகாரி பேசினார்.

எதிர்முனையில் பேசிய மர்ம நபர் , ‘போலீஸ் உடையில் மிடுக்காக மேஜையில் அமர்ந்திருந்தார். அவர் தன்னை மும்பையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

“ஹலோ நீங்கள் யார்? நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்” என்று அந்த மிடுக்கான தோற்றத்தில் இருந்த மர்ம நபர் மிரட்டினார். உங்களது செல்போனில் கேமராவை ஆன் செய்யுங்கள். உங்கள் முகத்தை நாங்கள் பார்க்கவேண்டாமா?’ என்றும் மர்ம நபர் உத்தரவிட்டார்.

இதற்கு பணிவாக பதில் அளித்த சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, “ஐயா, எனது செல்போனில் கேமரா சரியாக இயங்கவில்லை.ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை கைது செய்ய வேண்டாம்” என்று மன்றாடினார்.

‘சிக்கிட்டாண்டா ஒரு கொத்தடிமை’ என்று உற்சாகமடைந்த போலி போலீஸ் அதிகாரி, நிஜ போலீஸ் அதிகாரியை தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து மிரட்டினார். சிறிது நேரத்தில் நிஜ போலீஸ் அதிகாரி செல்போனில் கேமராவை ஆன் செய்து தனது அடையாளத்தைக் காட்டினார்.

வீடியோ காலில் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியை மிரட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த போலி போலீஸ் அதிகாரி அதிர்ச்சியில் உறைந்தார். அதுவரை மிரட்டும் தொனியில் பேசிய போலி அதிகாரி தன்னை அறியாமல் நமட்டு சிரிப்பு சிரித்து சமாளித்தார்.

“நீ, திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியிடம் பேசி கொண்டிருக்கிறாய். உனது இருப்பிடத்தை கண்டறிந்துவிட்டோம். உன்னைத் தேடி போலீஸ் வருகிறது” என்று நிஜ போலீஸ் அதிகாரி கூறியதும். போலி போலீஸ் அதிகாரி வீடியோ கால் அழைப்பை உடனடியாகத் துண்டித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் மும்பை சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மும்பை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டிருந்தார்கள். மும்பையில் ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top