Close
நவம்பர் 24, 2024 5:54 காலை

அதானியை ஏன் அமெரிக்கா குறி வைக்கிறது..?

அதானி நிறுவனம் கையாளும் குஜராத் மாநிலத்தின் முந்திரா துறைமுகம்

உலக அளவில் ஒரு பழமொழி உண்டு. எவன் ஒருவன் கடலை கட்டுப்படுத்தி ஆள்கிறோனோ அவனே உலகை ஆள முடியும் என்கிற பழமொழி இருக்கிறது.

ஒரு நாடு உலகை ஆள வேண்டும் என்றால் அது முதலில் கடலை ஆள வேண்டும். இந்தியா உலகை ஆள வேண்டும் என்று விரும்பினால், முதலில் உலகில் உள்ள கடல் பரப்புகளை ஆள வேண்டும். அப்பொழுது தான் உலகம் முழுவதும் இந்தியாவின் வர்த்தகம் போட்டியின்றி நடைபெறும்.

அதற்கு கடல்களில் உள்ள துறை முகங்களை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். இதற்காக தான் மோடி அதானியை ஊக்குவித்து வருகிறார்.

அதானி குழுமத்தின் முக்கிய வேலையே அதானி போர்ட்ஸ் மூலமாக உலகில் உள்ள பல துறைமுகங்களை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பது தான். அதானி குழுமம் பல நாடுகளில் உள்ள பல துறைமுகங்களை துறைமுக மேம்பாடு என்கிற பெயரில் பல வருடங்களுக்கு கான்ட்ராக்ட் எடுத்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்.

ஒரு நாட்டின் துறைமுகம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் கிட்டதட்ட அந்த நாட்டின் கடல் வழி இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்து விடும். இலங்கையில் கொழும்பு துறைமுகம், வியட்நாமில் டா நான்க் துறைமுகம், தான்சானியாவில் டார் எஸ்சலாம் துறைமுகம், இஸ்ரேலில் ஹைபா துறைமுகம் என்று பல நாடுகளில் உள்ள முக்கிய துறைமுகங்கள் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதானி கட்டுப்பாட்டில் இதுவரை உலகளவில் 30 துறைமுகங்கள்  இருக்கின்றன. இன்னும் ஒரு 10 வருடத்தில் உ லகில் உள்ள துறைமுகங்களில் 70% அதானியின் கட்டுப்பாட்டில் வந்து விடும்.

உலகை ஆளும் வல்லரசு என்று வாய் கிழிய பேசும் அமெரிக்கா உலகின் கடல் வழிகளை கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்காவிற்கு அடுத்து உலகை ஆளத்துடிக்கும் சீனாவால் ஒன் ரோடு ஒன் பெல்ட் என்று கூறி பல நாடுகளின் துறைமுகங்களை கைப்பற்ற நினைத்தாலும் முடியவில்லை. அதானி முந்தி கொண்டு விடுகிறார்.

உலகை ஆள நினைக்கும் இந்தியாவின் கனவை நினைவாக்க அதானியால் மட்டுமே முடியும் என்பதால் அமெரிக்காவும் சீனாவும் அதானியை காலி செய்ய பல வழிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனா தன்னுடைய கம்யூனிசலாபியை வைத்து இந்தியாவில் அதானியை வீழ்த்தும் வேலைகளை செய்து வருகிறது. அமெரிக்கா இந்தியாவில் உள்ள சில அரசியல்கட்சி பிரமுகர்கள் துணையுடன் அதானியை காலி செய்யும் முனைப்புடன் இருக்கிறது.

அதானி வீழ்ந்தால் இந்தியாவின் கடலை ஆளும் கனவு முடிந்து விடும். அமெரிக்காவும் சீனாவும் இந்தியா உலகை ஆள வந்து விடக் கூடாது என்பதற்காக அதானியை குறி வைத்து தாக்கி கொண்டு வருகிறார்கள்.

ஆனால் காலம் என்று ஒன்று இருக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் உலகை ஆள நினைக்கும் இந்தியாவின் கனவை மோடியின் மூலமாக அதானியின் வழியாக நிச்சயமாக நிறைவேற்றுவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top