மக்களவைத் தேர்தலில் பெரும் சரிவை சந்தித்த உடன், ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னார் பட்னாவிஸ்.
அவர் மீது நம்பிக்கை வைத்து, BJP தலைமை அவருக்கு துணை நின்றது. இன்றைக்கு யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். அஜித் பவாரின் செல்வாக்கு குறைந்து விட்டது என தன் கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்ததை எல்லாம காதில் வாங்கிக் கொள்ளாமல், கூட்டணியை இன்னும் வலுப்படுத்தினார் தேவேந்திர பட்னாவிஸ்.
கூட்டணிகள் கேட்டதை எல்லாம் விட்டுக் கொடுத்தார். தனித்து நாமே வென்று விட முடியும் என நினைக்காமல், பாஜக ஆட்சியை தக்க வைக்க முதல்வர் பதவியை கூட விட்டுக் கொடுத்தார்.
அதுதான் தலைமைக்கு உரிய பண்பு. அரசியல் விமர்சகர் யாரோ, எதையோ சொல்கிறார் என்று எதையும் செய்யாமல், அமைதியாக இருந்து, விட்டுக் கொடுத்து சென்ற அவரது பண்புக்கு கிடைத்திருக்கும் பரிசு இந்த வெற்றி.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக சறுக்கியது அப்பொழுது தேவேந்திர பட்னாவிஸ் கூறியது “இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது சட்டபேரவை தேர்தலுக்கு நாங்கள் மீண்டும் எழுவோம் அந்த வெற்றியை மோடிக்கு பரிசு அளிப்பேன் என்றார்”. சொன்னதை செய்தார் பட்னாவிஸ்.