Close
நவம்பர் 28, 2024 11:48 காலை

வயநாடு தொகுதி எம்.பியாக பிரியங்கா காந்தி பதவி ஏற்றார்..!

எம்பியாக பதவியேற்றுக்கொண்ட பிரியங்கா காந்தி

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரியங்கா காந்தி இன்று மக்களவையில் எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். இதன் மூலம் காங்கிரசின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்துக்கொண்ட அவர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குமிக்கதொகுதியாக விளங்கும் வயநாடு தொகுதியைத் தக்கவைப்பதற்காக, ராகுல் காந்தியின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை வயநாடு தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

அந்த இடைத்தேர்தலில் இ.கம்யூனிஸ்ட் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி, நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி இன்று வயநாடு தொகுதி எம்பியாக பதிவியேற்றார். அவர் தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தி முதன்முறையாக மக்களவைக்குச் சென்றதை கொண்டாடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top