சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அனுப்பப்படவுள்ள செயற்கைக் கோளான ப்ரோபா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிசம்பர் 4ம் தேதி பி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலமாக விண்ணில் பாயவுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் பேசப்படும் வகையில் நமது நாடு விண்வெளித்துறையில் முன்னேறி வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நம் நாட்டுக்குத் தேவையான செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி வணிக ரீதியிலும் பிற நாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
அந்த வகையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்கைக் கோளான ப்ரோபாவை வரும் டிசம்பர் 4ம் தேதி விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளி செய்து வருகிறது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி 59 (PSLV-XL C-59) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ப்ரோபோ செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.
550 கிலோ எடையுள்ள ப்ரோபா செயற்கைக் கோள், சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி மையத்தால் தயார் செய்யப்பட்டதாகும். இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஆசைப்படுவோர் இன்று (28ம் தேதி) முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.