Close
டிசம்பர் 5, 2024 2:46 காலை

வின்ஸோ கேமிங் நிறுவனம் கூகுள் மீது புகார்..!

வின்ஸோ கேம்ஸ் -கோப்பு படம்

இந்தியாவின் பிரபல கேமிங் நிறுவனமான வின்ஸோ இருந்து வருகிறது. வின்ஸோ கேமிங் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் மீது இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அதன்பேரில் கூகுள் நிறுவனத்தை விசாரிக்க உள்ளது.

இந்திய கேமிங் நிறுவனமான வின்ஸோ நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில், கூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ.,) உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங் நிறுவனமான வின்ஸோ, நம்பகத்தன்மை விதிகளை மீறியதாக கூகுள் மீது இந்திய போட்டி ஆணையத்திடம் (competition commission of india) புகார் அளித்துள்ளது. அந்த புகாரின்படி கூகுள் ப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்படும் வணிகம் சார்ந்த ஆன்லைன் கேம் ஆப்களில், வின்ஸோ ஆப் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ஆன்ட்ராய்டு செல்போன்களில் வின்ஸோ ஆப் குறித்து ஆதாரமற்ற எச்சரிக்கை சைகைகள் காட்டப்படுவதால் நிறுவனத்தின் மீது நன்மதிப்பு கெட்டுப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், தங்களின் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ரவ்னீத் கௌர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு, இந்தப் புகார் குறித்து கூகுள் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி, 60 நாட்களுக்கு அறிக்கை சமர்பிக்க சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது.

போட்டி ஆணையம்

போட்டி ஆணையம் என்பது, நிறுவனங்களுக்கு இடையே சமச்சீரான போட்டி நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top