Close
டிசம்பர் 5, 2024 2:43 காலை

‘நாங்க ஹெல்மெட் மாற்றி கல்யாண நிச்சயம் பண்றோம்’ : ஏன் தெரியுமா..?

ஹெல்மெட் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட மணமகனும் மணமகளும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு இளம் ஜோடி பரஸ்பரம் ஹெல்மெட்டை மாலை மாற்றுவதுபோல மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. இந்த நிகழ்வினை இந்த இளம் ஜோடி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்த ஒரு முயற்சியாகும்.

இந்த வீடியோ இணையத்தில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சிறப்பாக அமைய வேண்டும் என்று ஏராளமான இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டம், டோன்கர்கர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்துக்கு உட்பட்ட கரியாதோலா என்ற கிராமத்தில் வசிக்கும் திரேந்திர சாகு என்ற இளைஞர் ஜோதி சாகு என்ற பெண்ணை கடந்த ஞாயிறு அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அந்த நிச்சயதார்த்த நிகழ்வில் இருவரும் பரஸ்பரம் மோதிரம் மாற்றிக் கொண்ட பின்னர் ஹெல்மெட்டையும் மாற்றிக்கொண்டார்கள்.

ஹெல்மெட் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட மணமகனும் மணமகளும்

இதைப் பார்த்து நிச்சயதார்த்த விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியாகி நின்றனர். அதன் பின்னர் மணந்துகொள்ள உள்ள புது மாப்பிள்ளையும் பெண்ணும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படி ஹெல்மெட்டை மாற்றிக்கொண்டோம் என்று விளக்கம் அளித்தனர். பிரேந்திர சாகுவின் தந்தை பஞ்சுராம் சாகு என்பவர் பஞ்சாயத்து செயலாளராக இருந்துள்ளார்.

ஒருநாள் வேலைமுடிந்து வீட்டிற்கு பைக்கில் அவர் திரும்பி வந்தபோது ஹெல்மெட் அணியவில்லை. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பஞ்சுராம் சாகு படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து பஞ்ச்ராமின் குடும்பத்தினர் தொடர்ந்து ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதன் அவசியத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பஞ்சுராமின் மகன் பிரேந்திரசாகு தனது நிச்சயதார்த்தத்தின் போது ஹெல்மெட் மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் இவரது குடும்பத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஹெல்மெட் வழங்கியும் உள்ளனர் என்ற மகிழ்ச்சி செய்தியும் அப்பகுதியில் பரவி அவர்கள் மீது ஒரு நல்ல பிப்பிராயம் ஏற்பட்டுளளது.

தற்போது இந்த ஹெல்மெட் மாற்றிய திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக அக்கறை கொண்ட அந்த இளம் ஜோடிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாமளும் வாழ்த்தலாமே.

வாழ்க பல்லாண்டு..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top