வாடகை மீதான ஜிஸ்டியைப் பற்றிய தேடலில் கிடைத்த தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. கமர்சியல் வாடகைக்கு மட்டுமே ஜிஸ்டி உண்டு. அதிலும் அந்த கமர்சியல் பில்டிங் ஓனருடைய வருமானம், வருடத்திற்கு 20 இலட்சத்திற்கு மேல் சென்றால் மட்டுமே ஜிஸ்டி வரம்பிற்குள் அந்த கட்டிட வாடகை வரும். அதனை விடுத்து, அந்த கட்டிட ஓனருடைய மொத்த வருமானம் 20 இலட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில், வாடகை மீதான ஜிஸ்டி பற்றிய கவலை தேவையில்லை.
அடுத்த விஷயம், ஒருவேளை வாடகைக்கு குடியிருப்பவர் ஜிஸ்டியில் பதிவு செய்திருப்பவராக இருந்தும், அவருடைய வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவாக இருந்து (அதே சமயத்தில் கட்டிட ஓனரும் வருட வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவானதாக இருந்தால்) வாடகை மீதான ஜிஎஸ்டி பற்றிய கவலையே தேவையில்லை. பல சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் செய்வோர் இந்த கேட்டகரியில் வந்து விடுவர்.
அடுத்தது குடியிருப்பவரின் வருட வருமானம் 20 இலட்சத்தினை தாண்டும் பட்சத்தில், (கட்டிட ஓனரின் வருட வருமானம் 20 இலட்சத்தினை தாண்டவில்லையெனில்) வாடகை மீதான வரி கட்டத் தேவையில்லையென்றே நினைக்கிறேன். இதில் இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
வாடகைக்கு இருப்பவர் மற்றும் கட்டிட ஓனர் இருவரின் வருமானமும் 20 இலட்சத்தினை தாண்டும் பட்சத்தில், வாடகை மீதான 18% ஜிஸ்டி கட்டிட வேண்டும், அதனை ஐஎஸ்டிசி முறையில் திரும்ப பெற்றுக்கொள்ள வழியுள்ளது.
வாடகைக்கு இருப்பவரின் வருமானம் 20 இலட்சத்திற்கு குறைவாகவும், கட்டிட ஓனரின் வருமானம் 20 இலட்சத்திற்கு அதிகமாகவும் இருந்தால் மட்டுமே வாடகைக்கு குடியிருப்பவருக்கு பிரச்சனை ஏற்படும். ஏனெனில் வாடகை மீதான 18% ஜிஸ்டி செலுத்த வேண்டியதிருக்கும். செலுத்திய பின்னர் அதனை குடியிருப்பவரால் திரும்ப பெற்ற இயலாது (ஆனால் இவ்வகையான விஷயங்கள் மிகக் குறைவுதான்).
ஆனால் இது எப்படி பரப்பப்படுகிறது என்றால், தொழில் செய்யும் அனைவர் மத்தியிலும் ஒரு பயத்தினை ஏற்படுத்தும் படிக்கு இவ்விஷயம் பரப்பப்படுகிறது. உண்மையில் வாடகை ஜி.எஸ்.டி., பெரும்பாலானோர்களைப் பாதிக்காது.
ஆனால் ஜிஸ்டிக்குள் வராத வாடகைக்கு குடியிருப்பவர், ஜிஸ்டிக்குள் இருக்கின்ற பில்டிங் ஓனர் என்ற நிலையில் தான் வாடகைக்கு குடியிருப்பவருக்கு பிரச்சனைகள் ஏற்படும். இதற்கும் அரசு சரியான தீர்வினை கொடுத்து விடும்.
மற்றபடி வழக்கமாக மத்திய அரசின் மீது பரப்பப்படும் (சிறு உண்மையைக் கொண்டு) பெரும் பொய்கள் போலவே, இவ்விஷயமும் உள்ளது. இதில் பாஜகவும் மெத்தனம் காட்டக்கூடாது, உடனடியாக விளக்கங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திட வேண்டும்.