Close
டிசம்பர் 5, 2024 2:31 காலை

2025ம் ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்னென்ன..?

யுபிஐ பரிவர்த்தனை -கோப்பு படம்

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) கொண்டு வந்துள்ள யுபிஐ பரிவர்த்தனை விதிகள் (UPI Transaction Rules) வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. 2025ம் ஆண்டு என்று நாம் எண்ணிவிட முடியாது. ஏனெனில் அடுத்த ஒரு மாதத்தில் 2025ம் ஆண்டு தொடங்குகிறது.

அதனால் எல்லா வங்கிகள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அந்த விதிகளுக்கு உட்பட்டு பணப் பரிவர்த்தனைகளை செய்யவேண்டும். இநத விதிகள் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்வது வாடிக்கையாளர்களுக்கு அவசியம் ஆகும்.

2025ம் ஆண்டில் அமலுக்கு வர இருக்கும் மாற்றங்களை நாம் பார்ப்போம். இது உங்களது டிஜிட்டல் பரிவர்த்தனையில் நேரடி மாற்றங்களை கொண்டு வரப் போகிறது. முதலாவது விதி யுபிஐ பரிவர்த்தனை வரம்பில் (UPI Transaction Limit) நடக்கிறது. யுபிஐ இல்லாத பேங்க் கஸ்டமர்களே இப்போது கிடையாது.

ஆகவே, புது பரிவர்த்தனை வரம்பை தெரிந்து கொண்டு பணத்தை அனுப்புங்கள். ஜனவரி 1ம் தேதி முதல் யுபிஐ 123பே பரிவர்த்தனை (UPI 123PAY Transaction) அதிகரிக்கப்படுகிறது. இப்போது, 5000 ரூபாயாக யுபிஐ 123பே பரிவர்த்தனை வரம்பு (UPI 123PAY Transaction Limit) இருக்கிறது. இதை இந்திய ரிசர்வ் வங்கி 10000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆனால், பேங்குகள் மற்றும் சேவை வழங்குநர்கள் இந்த விதிகளை பின்பற்றி கஸ்டமர்களுக்கு சேவைகளை வழங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அவகாசம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிடும்.

இதனால், என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) அமல் செய்ய இருக்கிறது.பேங்குகள் மற்றும் சேவை வழங்குநர்கள் ஜனவரி 1ம் தேதி முதல் புது யுபிஐ 123பே பரிவர்த்தனை வரம்பின்படி சேவைகளை வழங்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உத்தரவு வழங்கியுள்ளது. ஆகவே, யுபிஐ 123பே பயனர்களுக்கான வரம்பு இனிமேல் 10000 ரூபாயாக அதிகரித்துவிட்டது. இது ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு இந்த பரிவர்த்தனை அடிப்படையில் நடக்கும்.

இந்த புது பரிவர்த்தனை வரம்புடன் வேறு என்ன விதிகள் அமலுக்கு வருகின்றன என்பதையும் பார்க்கலாம்.

யுபிஐ 123பே மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் கேட்கப்படாது. பீச்சர் போன்கள் மூலம் ஐவிஆர் எண் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆகவே, இதற்கு உங்களிடம் இன்டர்நெட் சேவை கொண்ட மொபைல் இருக்க வேண்டியது இல்லை.

இப்படி பல்வேறு விதிகள் வருகின்றன. இதே ஜனவரி 1ம் தேதி முதல் மற்றொரு புது விதியும் அமலுக்கு வர இருக்கிறது. பான் கார்டு (PAN Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்த விதிகளின்படி ஆதார் கார்டு (Aadhaar Card) உடன் இணைக்க வேண்டும்.

இதை செய்யவில்லை என்றால், டிசம்பர் 31ம் தேதிக்குப் பிறகு அது செயலிழப்பு செய்யப்படும்.பான் கார்டுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. ஆனால், அதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்யும்போது, சிக்கல் ஏற்படும். பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் போகலாம். ஆகவே, டிசம்பர் 31ம் தேதி வரையில் இருக்கும் அவகாசத்தை பயன்படுத்திக்கொண்டு பான் கார்டுடன் ஆதார் கார்டை இணையுங்கள்.

இன்னும் விரிவாக சொன்னால், டிசம்பரில் இருந்தே சில விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. அதாவது, டிசம்பர் 1ம் தே முதல் சிம் கார்டுகளுக்கு எஸ்எம்எஸ் விதிகள் வருகின்றன. டிசம்பர் 14ம் தேதிக்குள் ஆதார் அப்டேட் அவகாசம் முடிகிறது. ஆகவே, இருக்கும் இந்த குறைந்த நாட்களில் என்னென்ன விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top