ஓடிசா மாநிலத்தில் உள்ள மதுபானம் உற்பத்தி செய்யும் பௌதா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 நாட்கள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு 36 இயந்திரங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
மிகப்பெரிய வருமான வரித்துறை ரெய்டு
நமது நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதை நாம் பரவலாக அறிந்ததே. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான பணத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.நமது நாட்டின் வரலாற்றில் வருமான வரித்துறை சோதனையில் இந்த சோதனை மிகப்பெரியது என்று வருமான வரித்துறையே அசந்துபோனதாம்.
10 நாட்கள் நடந்த இந்த சோதனையில் அதிகாரிகளுக்குக் கிடைத்த பணம் எவ்வளவு என்பதை அறிந்தால் எல்லோருமே அசந்துபோவோம்.
ஒடிஷாவில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு
நம் நாட்டில் நடந்த மிகப்பெரிய சோதனையாக கருதப்படும் இந்த சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் ஓடிசா மாநிலத்தில் நடத்தினார்கள். ஓடிசா மாநில மதுபான உற்பத்தி நிறுவனமான பௌதா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து கிளைகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
352 கோடி பணம் பறிமுதல்
10 நாட்கள் நடந்த இந்த சோதனையில் 352 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தரையில் புதைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் சிறப்பு ஸ்கேனிங் சக்கரம் என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தியதாக தகவலும் கிடைத்துள்ளது.
இதன் மூலம் பௌதா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த பணத்தை எண்ணுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமாக 36 காசு எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.
தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கை இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. சோதனையில் அதிக பணம் கிடைத்ததால், பணம் எண்ணும் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், பணத்தை எண்ண பல்வேறு வங்கிகளின் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள். பணம் எண்ணுவது தொடர்பான சில புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெவ்வேறு தலைப்புகளில் வைரலாகி வருகின்றன.
மூட்டைகளில் பணம்
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கொண்டு செல்வதற்கு சிறப்பு வாகன ஏற்பாடு செய்யப்பட்டது. கடுமையான பாதுகாப்புடன் பணத்தை மூட்டைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர். தற்போது இந்தப் பணம் வருமான வரித்துறையின் கடுமையான பாதுகாப்புக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது. சோதனையின் ஒவ்வொரு நொடியையும் வருமான வரி அதிகாரிகள் விடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஐடி ரெய்டு நடத்தப்பட்டது கடந்த ஆகஸ்ட் மாதம் ஆகும். மத்திய அரசு சோதனை நடத்திய அதிகாரிகளைப் பாராட்டியது. இந்த மிகப்பெரிய ஐடி ரெய்டு வருமான வரி புலனாய்வு அதிகாரி எஸ்.கே. ஜா மற்றும் கூடுதல் இயக்குனர் குருபிரீத் சிங் தலைமையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.