Close
டிசம்பர் 4, 2024 7:04 மணி

‘அதானி விவகாரம், பெஞ்சல் புயல்’ விவாதிக்க அனுமதி இல்லை : எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு..!

இந்திய பாராளுமன்றம்

அதானி விவகாரம் குறித்தும் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயல் பாதிப்பு போன்றவை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சியினர் இன்று வரை அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு (3ம் தேதி) இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் அதானி விவகாரம், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுத்திய பெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷமீட்டனர்.

ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா அதற்கு அனுமதி அளிக்காததால் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பேசினர்.

தமிழக எம்.பி வைகோ பேசும்போது:-

புயல் மழை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளை கணக்கிட உடனடியாக உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டுக்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.

பெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. புயலாலும் மழையாலும் பெரிதும் பாதிப்படைந்துள்ள தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top