Close
ஏப்ரல் 3, 2025 8:47 மணி

சக்கரவியூகத்தில் சிக்கியுள்ளாரா? பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உலகின் மறைக்கப்பட்ட சர்வதேச சக்திகளின் சக்கர வியூகத்தில் சிக்கி உள்ள பிரதமர் மோடி தடைகளை தகர்த்து வெற்றி பெறுவாரா?

உலகளவில் ஒரு மறைக்கப்பட்ட சர்வாதிகாரம் மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. இதன் நெட்ஒர்க் என்ன என்பது குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். தெரிந்தும் பிரதமர் சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளார் என உலக நிலவரங்களை கவனிக்கும் பத்திரிக்கையாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.

உலகை ஆட்டிப்படைக்க துடிக்கும் இந்த நிழல் அமைப்புகளுக்கு பிரதமர் மோடி சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். இதனால் பிரதமர் மோடியை வீழ்த்த இந்த நிழல் உலகம் ஒரு வலை பின்னி உள்ளது. இந்த வலைப்பின்னல் தற்போது மோடியை சுற்றிலும் மூன்று விஷயங்களை பின்னி உள்ளது.

முதல் விஷயம் இந்தியாவின் பொருளாதாரம். பிரதமர் மோடி இந்திய பொருளாதாரத்தை சிறப்பாக முன்னேற்றி உலகின் மூன்றாம் இடத்திற்கு கொண்டு வந்து விட்டார். இன்னும் இவரது ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பல மடங்கு பெருகி வளர்ந்து விடும்.

இதனால் இப்போதைக்கு மோடியை அகற்ற முடியாது என கருதிய நிழல் உலகம் இந்திய பொருளாதாரத்தை சிதைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பாராளுமன்றம் கூடும் நேரங்களில் இந்திய பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. எப்படியாவது இந்திய பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தப்பார்க்கிறது. இது இந்த கும்பலின் சக்கர வியூகத்தில் முதல் படி.

இரண்டாவது உலக அளவில் யாராலும் வெல்ல முடியாத பாதுகாப்பு படை என்று இந்திய பாதுகாப்பு படைகளை மோடி வலுப்படுத்தி விட்டார். இதனை நிழல் உலக பிரமுகர்களால் தாங்க முடியவில்லை. இதனால் பிரதமரின் அற்புதமான திட்டமான அக்னிபாத் திட்டத்தை குறைசொல்வது, இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வாங்கும் ஆயுதக் கொள்முதல் குறித்து சந்தேகம் எழுப்புவது என இக்கும்பல் பல்வேறு அவதுாறுகளை பரப்பி வருகிறது.

அடுத்து இந்தியாவின் உணவு உற்பத்தியை முடக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. விவசாயிகளை பிரதமருக்கு எதிராக போராடுமாறு துாண்டி விட்டுள்ளது. மீண்டும் ஒரு விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொள்ள நாடு தயாராகி வருகிறது. இப்படி பிரதமருக்கு எதிராக வெளிநாட்டு நிழல் சக்திகள் பின்னும் சக்கர வியூகத்தில் பிரதமர் தற்போது சிக்கி உள்ளார். அவர் இதனை உடைத்து எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை நாம் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் மோடி வெல்வார் என உலக நிலவரங்களை கவனித்து வரும் பத்திரிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top