Close
ஏப்ரல் 3, 2025 4:22 காலை

ஜனவரி-2025 முதல் ஹெல்மெட் கட்டாயமாம்..! ஆக்ஷனுக்கு தயாராகும் போலீசார்..!

புதுச்சேரி போக்குவரத்து போலீசார் -கோப்பு படம்

2025 ஜனவரி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அறிவிப்பாகும். ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

அதன் பின்னர் கவர்னராக இருந்த கிரண்பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் மட்டுமே ஹெல்மெட் அணிந்தனர்.

இந்த நிலையில் 2025ம் ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை போலீசார் கொண்டு வரஉள்ளனர். ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த போக்குவரத்து போலீசார் துரிதமாக இறங்கி உள்ளனர். அதற்கான முயற்சிகள் நடந்துவரும் சூழலில், விதிகளை முறையாக பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top