Close
ஏப்ரல் 4, 2025 12:15 காலை

நாட்டின் வளர்ச்சி : பிரதமர் உறுதி..!

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி

அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக வழிகாட்டி முன்னேற்ற பாதையில் அழைத்து வந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 75ஆவது ஆண்டு விழா உலக ஜனநாயகங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்ற தலைப்பில் கடந்த 2 நாட்களாக அரசமைப்பு விவாதம் நடைபெற்ற நிலையில் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையில் பேசியதாவது:

75 ஆண்டுகால சாதனை சாதாரணமானது அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் முன் நான் மரியாதையுடன் தலைவணங்க விரும்புகிறேன்.

அரசமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது இந்தியா தான். பெண்களின் பங்களிப்பை அரசமைப்பு வலுப்படுத்தி வந்துள்ளது. அனைத்து முக்கிய திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட்டுள்ளன.

உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது விரைவில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும். 2047-ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறிவிடும்.

இதற்கான அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு விட்டன. நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்த அனைத்து விஷயங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதும், நாட்டின் அரசியல் அமைப்பினை வலுப்படுத்துவதும், நாட்டின் வளர்ச்சியையும் பாதுகாப்பினையும் உறுதியுடன் மேற்கொள்வதும் தனது அரசின் உறுதியான கடமை. இவ்வாறு பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top