Close
டிசம்பர் 18, 2024 5:49 மணி

தந்தையாக விரும்பி கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு: தப்பியது கோழிக்குஞ்சு..!

சத்திஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மருத்துவமனை

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கியதால் உயிரிழந்தார். அவர் விழுங்கிய கோழிக்குஞ்சு உயிருடன் மீட்கப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம், சிந்த்காலோ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் யாதவ். அவருக்கு 35 வயது. அவருக்குத் திருமணமாகி பல வருடங்களாக குழந்தைகள் இல்லை. ஆனந்த் யாதவ் மந்திரம் மற்றும் பரிகார பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்டவர். தந்தையாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஏதேனும் பரிகாரங்களை செய்து கொண்டே இருந்தார் வெந்து கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆனந்த் யாதவ், திடீரென மயக்கம்போட்டு விழுந்துவிட்டதாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக ஆனந்த் யாதவ் இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது.

சடலத்தை உடற்கூராய்வு செய்தபோது ஆனந்த் யாதவ் மரணத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்தது. அவரது தொண்டையில் உயிருடன் ஒரு கோழிக்குஞ்சு சிக்கியிருப்பதைக் கண்டனர். அந்த கோழிக்குஞ்சு உயிருடன் மீட்கப்பட்டது.

தொடர் விசாரணையில், மந்திரங்கள் மற்றும் பரிகார பூஜைகள் மீது அதிக நம்பிக்கை கொண்ட ஆனந்த் யாதவ் தந்தையாக வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்து வந்ததாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கினால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்று உள்ளூரில் உள்ள ஜோசியர் ஒருவர் கூறியதை நம்பி உள்ளார்.

ஜோதிடர் கூறியதை உண்மை என்று நம்பிய அவர், ஒரு கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கியுள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். உடற்கூராய்வு செய்த மருத்துவர் சாந்து பாக் இநத சம்பவம் குறித்து கூறியதாவது :

என் மருத்துவப்பணி அனுபவத்தில் இதைப்போல ஒரு சம்பவத்தை நான் பார்த்தது இல்லை. உயிரிழந்த ஆனந்த் யாதவ் தொண்டையில் சிக்கி இருந்த 20 செ.மீ., நீளமான கோழிக்குஞ்சு ஒன்றை எடுத்தேன். அதுவும் அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்தது.

தொண்டைக்குழியில் சிக்கிய கோழிக்குஞ்சால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆனந்த் யாதவ் உயிர் இழந்துள்ளார். கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட உடற்கூராய்வு செய்த நான் இதுபோன்ற ஒரு அனுபவத்தை சந்தித்தது இல்லை. இவ்வாறு மருத்துவர் சாந்து பாக் கூறினார்.

என்னதான் மந்திரத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், கண்மூடித்தனமாக நம்பி அதன்படி நடந்துகொண்டால் இப்படித்தான் உயிரிழக்க நேரிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top