Close
டிசம்பர் 18, 2024 10:53 காலை

புஷ்பா2 தியேட்டர் நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு : அல்லுஅர்ஜூனுக்கு சிக்கலா..?

ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா ஆகியோர் சிறுவனின் நிலை குறித்து கூறியபோது

புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்திருப்பது நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் போல தெரிகிறது.

டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்த்தில் உருவான புஷ்பா 2 படம் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் பிரமாண்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

புஷ்பா 2 படம் வெளியான தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் பிரிமியர் ஷோவுக்கு வந்து இருந்தனர். அப்போது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண், அவரது 9 வயது மகனுடன் கூட்டத்தில் சிக்கினார். கூட்டத்தில் சிக்கி ரேவதி உயிரிழந்துவிட, மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பெரும் பரபரப்பான இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு அறிவித்துள்ளது.

சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா உள்ளிட்டோர் சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவிடம் பேசினர்.

பின்னர் அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :

சிறுவனுக்கு மூளைச்சாவு அடைந்துவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் குணம் அடைய நீண்ட காலம் பிடிக்கலாம். சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனையில் உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top