Close
டிசம்பர் 19, 2024 7:47 காலை

ஜம்மு காஷ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் இருந்த பாதுகாப்பது படையினர் மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. அதனால் அவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top