Close
டிசம்பர் 23, 2024 7:25 மணி

முப்படைத் தளபதி பிபின் ராவத் இறப்புக்கு உண்மை காரணம் என்ன..?

முப்படைத் தளபதி பிபின் ராவத்

முப்படைகளில் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னுர் அருகே விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவர் இறப்புக்கு மனிதத் தவறே காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த காலகட்டத்தில் வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட மேகக்கூட்டம் சூழ்ந்ததால் நடந்த விபத்து என்று கூறப்பட்டிருந்தது.

2021ம் ஆண்டில் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து நடந்த மீட்பு பணி

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கோவையில் இருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் பிபின் ராவத் அவரது மனைவி மதுாலிகா உட்பட 11 பேருடன் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே மலை மீது மோதி விபத்தில் சிக்கி பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் விமானப்படை விபத்துகள் தொடர்பாக விசாரிக்கும் பாதுகாப்புத்துறை நிலைக்குழு இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியது.

2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான அந்தக் குழுவின் விபத்துகள் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 5 ஆண்டுகளில் விமானப்படை தொடர்புடைய 34 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்புக்கு ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறுதான் (Air Crew) காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Human Error காரணம் என்பது தெரியவந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top