கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெடுஞ்சாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து தும்கூரு செல்லும் நெடுஞ்சாலையில், நெலமங்களா என்ற இடத்தில் கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வாகனம் மற்றும் கார் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய கன்டெய்னர் லாரி அந்த கார் மீது கவிழ்ந்தது. அப்போது காரில் இருந்த 5 பேரும், அங்கு பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவரும் உடல் நசுங்கி 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் உடல் நசுங்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.