Close
டிசம்பர் 22, 2024 12:22 மணி

தொடர் விடுமுறை விமான கட்டணம் உயர்வு..!

விமானம் -கோப்பு படம்

வழக்கமாக ஆம்னி பஸ்கள் விடுமுறை காலங்களில் கட்டணத்தை உயர்த்தும். வாடகை கார், வேன்களின் கட்டணமும் உயரும். இப்போது விமானங்களின் கட்டணமும் உயர்த்துவது வாடிக்கையாகி விட்டது.

இப்போது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

✈️சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம்  – ₹4,796, இன்றைய – கட்டணம் ₹14,281

✈️சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய – கட்டணம் ₹17,695.

✈️சென்னை – தாய்லாந்து வழக்கமான கட்டணம் – ₹8,891, இன்றைய – கட்டணம் ₹17,437.

✈️சென்னை- துபாய் வழக்கமான கட்டணம் – ₹12,871, இன்றைய கட்டணம் – ₹26,752

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top