Close
டிசம்பர் 23, 2024 2:16 மணி

நாமினி நியமன சட்ட திருத்தம் என்ன சொல்லுது..? தெரிஞ்சிக்கலாமா..?

நாமினி நியமன புதிய சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாமினி நியமன சட்ட திருத்தம் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிதி தொடர்பான கணக்குகளில் நாமினி என்று அழைக்கப்படும் பரிந்துரைக்கப்பட்ட நியமனதாரரை நியமிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சொத்தின் உரிமையாளர் தனது கணக்கில் ஒரு நாமினியை சேர்ப்பது என்பது இப்போதுள்ள நடைமுறை. ஆனால், சில நேரங்களில் உரிமையாளருக்கு முன்னரே நாமினி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துவிடுகின்றன.

அதனால் உரிமையாளரின் கணக்குகளில் உள்ள தொகையை பெறுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் பெரும் சட்டச் சிக்கலை எதிர்கொள்கின்றார்கள். சட்டப்பிரச்னை வரக்கூடும் என்பதாலேயே வங்கி உள்ளிட்ட நிதிநிறுவனங்களும் தொகையை யாரிடம் வழங்குவது என்று முடிவெடுக்க முடியாமல் கைவிரித்து விடுகின்றன. இதனால் வங்கிகளில் ஆண்டுக்கு ஆண்டு உரிமை கோரப்படாத தொகை அதிகரித்து வருகிறது.

2023ம் ஆண்டு வரை உரிமை கோரப்படாத சொத்துகளின் மதிப்பு ரூ.62,225 கோடியாக இருந்த நிலையில், 2024ம் ஆண்டில் அது ரூ.78,213 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நாமினி நியமன சட்டத்திருத்தம் என்ன சொல்லுது?

நாமினி நியமன சட்டத்திருத்ததின்படி, முதலீடு தொடர்பான கணக்குகளில் அதிகபட்சம் 4 நாமினிகளை நியமிக்கலாம். அந்தவகையில், மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்குகள், காப்பீட்டு திட்டங்களிலும் 3 நாமினிகளை நியமிக்கலாம். வங்கிக் கணக்கிற்கு 4 நாமினிகள் வரை நியமிக்கலாம் என சட்ட திருத்தம் லோன்துவாரப்பட்டுள்ளது.

இதனால், மனைவி நியமனதாரர் என்ற வகையில் உரிமையாளர் மரணமடைந்தால் 100 சதவிகித தொகையையும் மனைவி பெற்றுக்கொள்ள முடியும். கணவருக்கு முன் மனைவி இறக்க நேரிட்டால் அடுத்த நாமினியாக மகன் கருதப்படுவார். ஒருவேளை தாய், மகன் ஆகியோர் உயிரிழக்க நேரிட்டால் மகள் நாமினியாக கருதப்படுவார்.

உதாரணத்திற்கு, தனது சொத்துகளில் 50 சதவிகிதம் மனைவிக்கும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை சரிபாதியாக மகன், மகளுக்கு பகிர்ந்து பதிவு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, கணவர் இறப்பதற்கு முன் நாமினிகளில் யார் இறந்தாலும், அவரது பங்கு மற்ற இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top