Close
ஜனவரி 4, 2025 2:19 காலை

விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் அடுத்த சாதனை..!

இந்தியாவின் எதிர்கால திட்டமான விண்வெளி ஆராய்ச்சி மையம் -கோப்பு படம்

பாரத தேசத்தின் வான்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ மாபெரும் திட்டத்தின் முதல் படியில் கால் வைத்துள்ளது.

ஆம், இரு செயற்கை கோள்களை தன் பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் மூலம் வானுக்கு ஏவியது இஸ்ரோ. அதில் இரு செயற்கை கோள்கள் இருந்தன ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டவை. இந்த இரு செயற்கை கோள்களையும் (SDX01  and SDX02 ) தனி தனியாக வெவ்வேறு இடங்களில் இந்திய ராக்கெட் சுமார் 475 கிமீ உயரத்துக்கு கொண்டு சேர்த்தது.

இது வழக்கமாக நடக்கும் நடைமுறை. இங்கே இது ஏன் மகா முக்கியம் என்று பார்க்கலாம். இந்த இரு செயற்கைகோள்களும் தானாகவே ஒன்றை ஒன்று தேடிச் சென்று இணையும் “வான்வெளி இணைவு” எனும் பெரும் நுணுக்கமான சாதனையினை செய்யும்.

இதை வெற்றிகரமாக செய்யும் பட்சத்தில் இந்தியா புதிய பலத்தை பெறும். இந்த வெற்றிக்கு பின்னர் பின் வான்வெளியில் நாமும் வீரர்களை அனுப்ப முடியும், அடுத்து விண்வெளி நிலையம் அமைக்கவும் முடியும்.

துறைமுகங்களில் எப்படி கப்பல் டொக் செய்யபடுமோ, அப்படி வான் வெளியில் ஒரு நிலையம் அமைத்து அங்கே இங்கிருந்து செல்லும் கலன்கள் டொக் செய்யபடுவது தான் ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம். சீனாவின் நிலையம், இப்போது சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருக்கும் சர்வதேச வான்வெளி நிலையத்தின் அடிப்படை.

இந்த நுட்பம் பெற தனி தனியாக இரு சாதனங்களை வான்வெளியில் இணைத்து அடிப்படை பலம் பெறவேண்டும். தற்போது ஏவப்பட்ட கோள்கள் இரண்டும் (SDX01 (chaser) and SDX02 (target) வரும் ஜனவரி 7ம் தேதி அந்த இணைப்பினை செய்யும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிச்சயம் பாரத விண்வெளி வரலாற்றில் மாபெரும் பாய்ச்சல் இது. இது இன்னும் சில வருடங்களில் பாரதம் சொந்தமாக் விண்வெளி நிலையத்தை வானத்தில் அமைக்கும் என்பதையும், இந்திய விண்வெளி வீரர்கள் அங்கே சென்று ஆய்வு செய்வார்கள் என்பதையும் சொல்கின்றது.

ஏன்ன தான் ஆய்வு என்றாலும் இந்த வான்வெளி நிலையங்களின் முக்கிய நோக்கம் அடுத்த தலைமுறையின் “ஸ்டார் வார்ஸ்” அதாவது வான் வெளி யுத்தத்திற்கான ஆயத்தம் தான்.

இனி உலக யுத்தம் ஒன்று வெடித்தால் அது பூமியோடு நில்லாது. வானத்திலும் பெரிதாக வெடிக்கும். எதிரி நாட்டு செயற்கை கோள்களை ஒழிப்பது, அவர்களின் தகவல் தொடர்பை ஒழிப்பது உச்சமாக பூமியில் பெரிய பின்னடைவினை ஒரு ராணுவம் சந்திக்க நேர்ந்தால் வானில் இருந்து தாக்குவது என இதன் உள்நோக்கம் மிகவும் பெரியது.

இந்த பலம் பாரதத்துக்கு மகா முக்கியம். விண்வெளி பந்தயம் என்பது தகவல் தொடர்புக்கும் விண்வெளி சுற்றுலாவுக்கும் அல்ல. எதிர்கால யுத்தமும் பாதுகாப்பும் அங்கே தான் இருக்கின்றது, அதனால் மோடி அரசு மிக சரியான தேசபாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றது.

இத்தேசம் விஸ்வாமித்திரர் காலத்திலே “திரிசங்கு” என வான்வெளி நிலையம் அமைத்த தேசம், இந்த விஞ்ஞான காலத்தில் அப்படி “திரிசங்கு” என வான்வெளி நிலையத்தை விண்வெளியில் அமைத்து அங்கு பாரத தேசியகொடியினை பறக்கவிட பிரார்த்திப்போம். மாபெரும் சாதனையின் முதல்படியில் இருக்கும் தேச விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top