கேரளாவில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தேர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அந்த மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் ஒரு ஆசிரியர். கடந்த 2019ம் ஆண்டு அவரது வீட்டுக்கு வழக்கமாக டியூஷனுக்கு வரும் பிளஸ் ஒன் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்முறை செய்ததை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி மறுத்து உடன்படாத நிலையில் மனோஜ் ஒரு அந்த வீடியோவை இணையத்தில் பரப்பிவிட்டார்.
அந்த விடீயோவைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மனோஜ் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆர்.ரேகா அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மனோஜ் மீது பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 3 மாதங்கள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, மொத்தம் 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை ஏக காலத்தில் மனோஜ் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.