Close
ஜனவரி 27, 2025 5:03 காலை

“உலகின் முதல் கார்பன்- நியூட்ரல் குழந்தை”..!

உலகின் கார்பன் சமநிலை குழந்தை ஆதவி

‘‘உலகின் முதல் கார்பன்- நியூட்ரல் குழந்தை என்ற பட்டத்தை அதவி என்ற குழந்தை பெற்றுள்ளது.

Test tube baby மாறி இது என்ன புதுசா கார்பன் பேபி…. படிங்க புரியும்….

‘கார்பன் நியூட்ரல் பேபி’ திட்டம் ” என்றால் என்ன?

“அதாவது நம் வாழ்நாள் முழுவதும் நம்மாளும், நம் செயல்களை சார்ந்தும் வெளியாகும் கார்பனை கிரகித்து அதை ஆக்ஸிஜனாக மாற்ற முன்னெடுக்கப்படும் முயற்சி தான் `கார்பன் நியூட்ரல் ஆகும்.”

சராசரியாக, ஒரு இந்தியர் ஆண்டுக்கு 2 டன் கார்பன் வெளியேற்றத்தை உருவாக்குகிறார். இதை நிவர்த்தி செய்ய, ஆதவியின் பெற்றோர் தினேஷ் அவர்களின் மனைவி ஜனகநந்தினி கர்ப்பமாக இருக்கும் போதே தன் குழந்தை நலத்தை முன்னிட்டு அவள் பிறப்பதற்கு முன்பே தங்கள் திட்டத்தைத் தொடங்கினர்.

இத்திட்டம் குழந்தை பிறந்தது முதல் அவர்கள் வாழ்நாளில் அவர்களால் வெளியாகும் மொத்த கார்பனையும் சமன் செய்ய 1000 மரங்களை நட வேண்டும். இதன்மூலம் கார்பன் – ஆக்ஸிஜன் பயன்பாடு சமன் செய்யப்படுகிறது” என்றார்.

மரத்தை நடுவதுடன் தன் கடமையை முடித்து கொள்ளாது, அதனை பராமரிக்கவும் புதிய முயற்சி ஒன்றையும் முன்னெடுத்துள்ளார். குழந்தைக்காக மட்டுமின்றி தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து அவர்களுக்குமான கார்பன் நியூட்ரல் முயற்சிக்கு 6 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க துவங்கியுள்ளார்.

2023ம் ஆண்டு தினேஷ் – ஜனகநந்தினி தம்பதியினருக்கு `ஆதவி’ என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே கார்பன் நியூட்ரல் குழந்தை என்ற பெருமையுடன் பிறந்தது. இதனால் ஐ.நா சபை மற்றும் தமிழக வனத்துறையும் ஆதவியை முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை என அங்கீகரித்து பெருமைப்படுத்தியுள்ளது.

மேலும் `ஆதவி’ குழந்தையை தமிழக வனத்துறையின் பசுமை முயற்சிகளுக்கான பிராண்ட் அம்பாசிடராகவும் நியமித்துள்ளனர்.

தினேஷின் இந்த சிறு முயற்சி பசுமை நிறைந்த ஆரோக்யமான சுற்றுப்புற சூழலை சீராக்கும் முன்னெடுப்பாக அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு மனிதனுக்கு சராசரியாக 23 மரங்கள் மட்டுமே உள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க கார்பன் மாசு இல்லாத பசுமையான ஒரு உலகை அமைத்து கொடுப்போம் என ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்கிறார் தினேஷ்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top