டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியுள்ளனர்.
டில்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 5 அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற வெறும் 5 நாள்களே உள்ள சூழலில் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேர் ஒரே நேரத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜ்வாஸன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஎஸ் ஜூன் முதலில் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்பித்தார். அவரைத் தொடர்ந்து, நரேஷ் குமார் யாதவ் (மெஹரௌலி), ரோஹித் குமார் (திரிலோக்புரி), ராஜேஷ் ரிஷி (ஜானக்புரி), மதன் லால் (கஸ்துரிபா நகர்), பவன் ஷர்மா (ஆதார்ஷ் நகர்) மற்றும் பாவனா கவுட் (பாலம்) ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து கடிதத்தை சமர்பித்துள்ளனர்.