Close
பிப்ரவரி 23, 2025 7:50 மணி

டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

டெல்லியில் ‘ஆம் ஆத்மியை அகற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவையே சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, தேசிய தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுவதென்ன?

மேட்ரிக்ஸ்:

ஆம் ஆத்மி 32 முதல் 37 இடங்களும், பாஜகவுக்கு 35 முதல் 40 இடங்களும், காங்கிரஸுக்கு 0 முதல் 1 இடங்களும் கிடைக்கும்

‘சாணக்யா ஸ்ட்ராடஜி’
பாஜக 39 முதல் 44 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 25 முதல் 28 இடங்களையும், காங்கிரஸ் 2 முதல் 3 இடங்களையும் கைப்பற்றும்

ஜே.வி.சி
பாஜக 39 முதல் 45 இடங்களை வெல்லும். ஆம் ஆத்மி கட்சி 22 முதல் 31 இடங்களிலும், காங்கிரஸ் 0 முதல் 2 இடங்களிலும் வெற்றி பெறும்

‘பீப்பிள்ஸ் பல்ஸ்’
பாஜக 51 முதல் 60 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்களையும் வெல்லும்

‘போல் டைரி’
பாஜக 42 முதல் 50 இடங்களிலும், ஆம் ஆத்மி 18 முதல் 25 இடங்களிலும் காங்கிரஸ் 0-2 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பீப்பிள்ஸ் இன்சைட்
பாஜகவுக்கு 40-44 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 25-29 இடங்களும் காங்கிரசுக்கு 0-1 தொகுதிகளே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பி-மார்க்
பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 39-49 இடங்களை வெல்லும் .ஆம் ஆத்மி கட்சிக்கு 21 முதல் 31 இடங்களும், காங்கிரஸுக்கு 0 முதல் 1 தொகுதிகளும் கிடைக்கும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top