Close
பிப்ரவரி 23, 2025 2:17 காலை

அமெரிக்காவுக்கு அநீதி இழைக்கிறாரா எலான் மஸ்க்?

டெஸ்லா காருடன் எலான் மஸ்க் -கோப்பு படம்

எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு பெரிய அநீதியாக இருக்கும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனம் சார்பில் இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, பிரதமர் மோடியை தொழில​திபர் எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பை அடுத்து, அமெரிக்​கா​வின் முன்னணி கார் தயாரிப்பு நிறு​வனமான டெஸ்லா இந்தியா​வில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சு​வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியா​வில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்பரத்தை லிங்க்டு இன் பக்கத்​தில் டெஸ்லா கடந்த திங்​கள்​கிழமை வெளி​யிட்​டது. அதில் 13 பதவி​களுக்கு விண்​ணப்பங்கள் கோரப்பட்டன.

இந்நிலையில், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் (பிப். 18) பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப், “இப்போது, ​​அவர் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தால், அது நமக்கு (அமெரிக்காவுக்கு) அநீதியானது என்று தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top