விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகன் பிணையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் இடைறாத போராட்டம் ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்றது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 -ஆம் தேதி ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு அளித்த எழுத்துபூர்வமான வாக்குறுதிகள் அளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஆனால், எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகள் எதையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை.போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும், இறந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அவர்களுக்கான குழு அமைக்கப்படும் போன்ற முக்கியமான வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
மேலும் உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது மகன் ஆசிஷ்மிஸ்ராவுக்கு கொடுத்த பிணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தஞ்சை ரயிலடி முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் காளியப்பன் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில்,வருகின்ற ஏப்ரல் மாதம் 11 -ஆம் தேதியில் இருந்து 17-ஆம் தேதி வரை குறைந்தபட்ச ஆதார விலையை உத்திரவாதம் செய்வதற்கான சட்டத்தை இயற்ற கோரி நாடு தழுவிய பிரசார இயக்கத்தை விவசாயிகளும் முன்னாடி இயக்கங்களும் மேற்கொள்ள இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் என் வி.கண்ணன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி தாளாண்மை உழவர் இயக்கத்தின் நிறுவனர் ர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சாமி. நடராஜன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரை யாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில்சிபிஐ கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் வெ.சேவையா, சிபிஐஎம் முன்னாள் நகர செயலாளர் என்.குருசாமி. ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ்.
மக்கள் கலை இலக்கியக்ப கழகத்தின் மாநில இணைச் செயலாளர் ராவணன், மக்கள் அதிகாரம் மாநகர செயலாளர் தேவா, மாணவர் சங்க மாநில செயலாளர் ஜி.அரவிந்தசாமி, புரட்சிகர மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி மதியழகன், சமூக ஆர்வலர்கள் எழுத்தாளர் சாம்பான், பொறியாளர் ராஜேந்திரன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.