Close
நவம்பர் 23, 2024 10:22 காலை

புதுக்கோட்டை கோயிலில்   தேய்பிறை அஷ்டமி:  காலபைரவருக்கு    சிறப்பு வழிபாடு

தேய்பிறை

புதுகை தண்டாயுதபாணிகோயிலில் நடைபெற்ற தேய்பிறைஅஷ்டமி சிறப்பு வழிபாடு

                                                                                                                                  புதுக்கோட்டை அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  பங்குனி மாத  வெள்ளிக்கிழமைசேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி யை முன்னிட்டு ஆலயத்திலுள்ள காலபைரவருக்கு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி   காலையில்   காலபைரவர்க்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.
பக்தர்கள் வந்திருந்து   வழிபட்டனர்அனைவர்க்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது . விழா ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.

தேய்பிறை அஷ்டமி காலபைரவர் சிறப்பு வழிபாடு  பற்றி   பாலு அய்யர்  கூறியதாவது: பைரவரின் சந்நிதானத்திற்கு முன்பாக புஷ்பங்களை வைத்து, தீபம் ஏற்றி பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.  ‘ஓம் பைரவாய போற்றி ’ என்ற மந்திரத்தை உச்சரித்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்யும்போது நம் மனதில் இருக்கும் தேவையற்ற பயம், குழப்பங்கள், அனைத்தும் நீங்கி, மனம் தெளிவு பெறும்.
உற்சாகத்தோடு நம்முடைய வேலையில் ஈடுபடுவதற்கு தேவையான மன தைரியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பொதுவாகவே பைரவர் வழிபாடு என்றால் அது மாலை நேரத்தில் செய்யக்கூடிய வழிபாடாக தான் இருக்கும்.
இருப்பினும்  வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தில், ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்வது என்பது சிறப்பாகஇருக்கும் என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top