1919 ஏப்ரல் 13-ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம்சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் ரௌலட் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெனரல் ரெஜினால்டு டையர் (Gen Reginald Dyer) என்பவனின் தலைமையில் அங்கு வந்த ஆங்கிலேயப் படை போராட்டம் செய்து கொண்டிருந்த அப்பாவிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும் சுட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தனர்.
அப்போது பஞ்சாப் மாகாணத்தின் லெஃப்டினன்ட் கவர்னராக இருந்தவர் தான் மைக்கேல் ஓ ட்வயர் (Sir. Michael O’Dwayer). இவர் ஜெனரல் டையரின் மேலதிகாரி. இவர் டையரின் துப்பாக்கி சூடு நடவடிக்கையை சரியான செயல் என்று பாராட்டியவர். தான் எழுதிய India as I knew it என்ற புத்தகத்திலும் இது தான் சரியான முடிவு என்று எழுதி உள்ளார்.
அந்த படுகொலைக்கு பழிவாங்க நினைத்த உத்தம்சிங் 1934-ல் லண்டனை அடைந்தார். பின்னர் அங்கேயே தங்கியிருந்து ஜெனரல் மைக்கேல் ஓ ட்வயரை படுகொலை செய்வதற்கான சந்தர்ப்பத்திற்காக வருடக்கணக்கில் காத்திருந்தார். 1940-ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று கிழக்கிந்திய சங்க கூட்டத்தில் பேசுவதற்காக ட்வயர் மேடை ஏறிய போது உத்தம்சிங் தனது கைத்துப்பாக்கியை எடுத்து இரு முறை சுட்டார். சம்பவ இடத்திலேயே கவர்னர் இறந்துவிட்டார்.
சிலர் உத்தம் சிங் தவறுதலாக கவர்னர் ட்வயர் தான் ஜெனரல் டையர் என்று நினைத்து சுட்டு விட்டார் என்பார்கள். அது சரி அல்ல. ஜெனரல் டையர் 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு இங்கிலாந்து அனுப்பப்பட்டார். அங்கு 1927 இல் பக்கவாத நோயால் தாக்கப்பட்டு பேசும் சக்தி இழந்து தனது 63 ஆம் வயதில் இறந்தார். அது இயற்கையான மரணம்.
ஆனால் உத்தம் சிங், பல முறை திட்டமிட்டு, மைக்கேல் ஓ ட்வயர் ஐ சுட்டு கொன்றது 1940 இல். டயரின் மேலதிகாரியான ட்வயர்தான் ஜாலியன் வாலாபாக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டவன். இவன் தான் இராணுவத்தை ஜாலியன் வாலாபாகுக்கு அனுப்பியது. அந்த நாட்களில் இவன் பஞ்சாபில் ஆடிய வெறியாட்டம் சொல்லுக்கடங்காதது. ஒருவழியாக ஜாலியன் வாலாபாக்கின் துயரம் துடைக்கப்பட்டது உத்தம் சிங் என்கிற சிங்கத்தால்..
—இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋