Close
நவம்பர் 23, 2024 10:13 காலை

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் பிறந்த நாள் இன்று…

அம்பேத்கர்

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் பிறந்த நாள் இன்று .

அண்ணல் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய அவர் தன்னுடைய பள்ளிக் காலத்தில் தான் தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதும், இந்தியாவின் சாதீய அமைப்பு தன்னை இழிவாக நடத்துகிறது என்பதனையும் அவர் புரிந்துகொண்டு ஆத்திரமடைந்தார். தன்னுடைய பணி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதே என்று முடிவெடுத்தார்.

தலித்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்யலாம் என்பதை ஆழமாக சிந்திக்கத் துவங்கினார். இந்தியாவில் சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். அதில் பெருமளவு வெற்றியும் கண்டார்.
இன்று அண்ணல் அம்பேத்கர் தலித் மக்களின் பிரதிநிதிபோல மட்டுமே சித்தரிக்கப்படுவதனால் அவருடைய இதர சிறப்புக்கள் அனைத்தும் பின்வரிசைக்குச் சென்று விடுகின்றன.

ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அண்ணல் அம்பேத்கர் இந்தியாவின் ஒரு தேசியத் தலைவர், ஜாதியத்தலைவர் அல்லர்.அவர் ஒரு மிகச் சிறந்த பொருளாதார மேதை. மிகச் சிறந்த சிந்தனையாளர், பேச்சாளர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் உலகச்சிறப்பு வாய்ந்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார்.

...நா. முத்துநிலவன்- பேச்சாளர்-எழுத்தாளர், கவிஞர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top