Close
நவம்பர் 23, 2024 10:17 காலை

ரயில்கள் தனியாருக்கு விற்பனை: ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள்

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் விரைவு ரயில்கள் தனியார் துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.முதன் முறையாக தென்னக ரயில்வேயின் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டு கோவையில் இருந்து சீரடி வரை செல்லும் விரைவு ரயில் இன்று புறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும் ஈரோடு ரயில்வே பணி மனை முன்பு சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுற்றுலா என்ற பெயரில் கோவை முதல் சீரடி வரை விரைவு ரயிலை தனியாருக்கு விற்றதை விலக்கிகொள்ள வேண்டும் என்றும் பாரத் கௌரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top