Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

கடலோரக் காவல் படையில் கிழக்கு பிராந்தியத்தில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டர்

இந்தியா

கடலோர காவல் படை

கடலோரக் காவல் படையில் கிழக்கு பிராந்தியத்தில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டருக்கு கிழக்குப் பிராந்திய தளபதி தலைமையில் உற்சாக வரவேற்பு.

இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் ரோந்துப் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது.

இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்தியத்தின் தலைமையகம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபட்டனம் வரை கடலோர ரோந்து பணியில் இப்பிராந்தியத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், டோர்னியர் ரோந்து விமானங்கள்,  நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் ஹோவர்கிராப்ட், சேடக் ஹெலிகாப்டர்கள் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

கடலோர காவல்படை

அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்:

இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH – Advanced Ligh Helicopter) என்ற புதிய ஹெலிகாப்டர் திங்கள்கிழமை முதல் இணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடலோரக் காவல்படை விமானதளத்தில்  கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்றான தண்ணீர் பீய்ச்சி அடித்து புதிய ஹெலிகாப்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்புதிய ஹெலிகாப்டர் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஹெலிகாப்டரில் நீண்ட தூரம் கண்காணிக்கும் வகையில் பன்மடங்கு திறன் பெற்றது. அதிநவீன ரேடார், எலெக்ட்ரோ ஆப்டிகம் போட், தானியங்கி கண்டறியும் அமைப்பு,  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட் டுள்ளன.

இப்புதிய ஹெலிகாப்டர் மூலம் இந்திய பொருளாதாரக் கடல் எல்லைக்கும் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தல்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட இயலும். மேலும் மூன்று இதே மாதிரியான ஹெலிகாப்டர்கள் விரைவில் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படையில் இணைக் கப்பட உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top