சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆறுதல் கூறியதுடன், மீனவர் விடுதலை குறித்த கடிதத்தையும் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த வாரம் கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
இந்த கைது சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் அழகப்பன், மாவட்ட பொதுச் செயலாளர் முரளி, மாவட்ட மீனவர் அணி தலைவர் பிரபு, மாநில மீனவர் அணி செயலாளர் விஜயன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது அவர்கள் மீனவர்கள் விடுதலை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து அவர் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் முருகனை தொடர்பு கொண்டு பேசியதாகவும் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவர்களை யும் விரைவில் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அவரிடம் தெரிவித்ததாகவும் கூறினர்.
மத்திய அரசு மீனவர் விடுதலை குறித்து அனுப்பிய கடிதத்தை மீனவர்களின் குடும்பத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் வழங்கினர். இந்த நிகழ்வில் பாதிடப்பட்ட மீனவர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டனர்.