Close
நவம்பர் 21, 2024 6:20 மணி

சுதந்திர தின அமுதப்பெருவிழா: புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,94,439 வீடுகளில் இந்திய தேசியக்கொடி பறக்கவிட ஏற்பாடு

புதுக்கோட்டை

சுதந்திரதின பெருவிழா தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு 4,94,439 வீடுகளில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது.

75 -ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, இந்திய அரசு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி என்ற தலைப்பில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள 4,94,439 வீடுகளில் இந்திய தேசிக் கொடியினை பறக்கவிடும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் தேசியக் கொடிகளை தயாரித்து அனைத்து வீடுகளுக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வது குறித்தும்.

மேலும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசியக் கொடிகளை பறக்க விடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்  கேட்டறிந்தார்.

மேலும் 75வது சுதந்திரத் தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, மருத்துவத்துறையின் சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், மின்னணு முறையிலான பிரசாரங்கள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளவும், கூட்டுறவு மற்றும் வழங்கல்துறையின் சார்பில் கொடிகளை வழங்குவது குறித்தும், நியாயவிலைக் கடைகளில் தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சம்மந்தப்பட்ட நாட்களில் தேசியக்கொடி ஏற்றவும், அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றவும், அனைத்து காவல் துறை மூலமாக தேசியக்கொடி அணிவகுப்பு நடத்திடவும், விழிப்புணர்வு மற்றும் சுவரொட்டிகளை அனைத்து காவல் நிலையங்களில் ஏற்படுத்திடவும்.

அனைத்து காவலர் இல்லங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் தேசியக்கொடி மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை ஏற்படுத்திடவும், அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தேசியக்கொடி குறித்த தகவல்களை ஏற்படுத்திடவும்.

 மேற்காணும் அனைத்து நிகழ்வுகளையும் இணையதளத்தில் பதிவிடவும், அனைத்து ஊடகங்களிலும் வெளிவரும் வகையில் சிறப்பான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிருவாகத்தின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.

இந்திய திருநாட்டின் 75 -ஆவது சுதந்திரத் தின அமுதப் பெரு விழாவை முன்னிட்டு, சுதந்திரத்திற்காக போராடிய இந்தியா முழுவதிலும் இருந்து 100 சுதந்திரப் போராளிகளை போற்றும் வகையில், தமிழகத்தில் புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், தியாகியுமான எஸ்.எஸ்.சத்தியமூர்த்தி அவர்களை மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கௌரவப்படுத்தும் வகையில் அவரது இல்லம், நினைவு இல்லம் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செய்து உள்@ர் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

அதனை முன்னிட்டு அனைத்துத்துறை சார்பிலும், அன்னாரது இல்லம் அமைந்துள்ள ஊரில் முகாம்களை அமைத்து அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதுடன், பயனாளிகளையும் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top