கூகுள்…
காற்றில் கரைந்து
நாட்டில்
நிறைந்திருக்கிறது
காலத்தின்
கதவுகளை
தன்
கை
விரல் கொண்டு
திறக்கிறது.
மொழியை கடந்து நிற்கிறது
செல்லும் வழியை கடந்து நிற்கிறது
பழி சொல்வோரைப்பார்த்து
பல்காட்டி நகைக்கிறது
நற் சொல்லோடு
நாளும் பிறக்கிறது.
நூலகத்தை
நொடியில் திறக்கிறது
நோய்நொடிப்பற்றிய
நுட்பங்களைச் அளிக்கிறது
நோக்கங்கள் எதுவாகினும்
நொடியில்
விளக்கம் தருகிறது.
வங்கியாய் மாறி
வாடிக்கையாளர்களை அழைக்கிறது
வருமானம் வேண்டுமென்றால்
வழிமுறைகளை கொடுக்கிறது
கண்டம்விட்டு கண்டம்
காசுபணம் அனுப்புகிறது
கணக்கு வழக்கையெல்லாம்
கனகச்சிதமாய் முடிக்கிறது.
வாகனத்தை அழைக்கிறது
வழி சொல்லிக்கொடுக்கிறது
வருவோர் போவோர்க்கெல்லாம்
வரை படமாய் திறக்கிறது
வானத்தையே அளக்கிறது
வட்ட நிலவில்
வாழவும்
வழி வகுக்கிறது!
புத்தகமாய் விரிகிறது
புதுமைகளை தருகிறது
புரியாத கதையெல்லாம்
புரியும்படி படிக்கிறது
ஆயக்கலைகள்
அறுபத்து நான்கையும்
அச்சு பிசகாமல்
அள்ளி, அள்ளி கொடுக்கிறது
கூகுள்…
அறிவியலின் உச்சம் இது
அதிசயத்தின் எல்லை இது
அனுபவிக்க தெரிந்துவிட்டால்
அற்புதம் இது
ஆனந்தத்தின் உருவம் இது
ஆகா!!!
என்ன இது!
இதற்குமேல் இதை
எப்படி சொல்லுவது!!!!
>>மருத்துவர் மு.பெரியசாமி, புதுக்கோட்டை.