புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா அடுத்த மாதம் நடைபெறுவதன் முன்னோட்டமாக பள்ளி.கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடைபெற்றது
புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா ஜூலை மாதம் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனை யொட்டி வைரம்ஸ் பள்ளியில் மாணவ, மாணவிகளுக் கான பேச்சுப் போட்டி, கம்பராமாயண பாடல் ஒப்பித்தல் போட்டி, ஒவியப் போட்டிகள் நடைபெற்றன.
எ ல் கே ஜி, முதல் கல்லூரி மாணவ மாணவியர்கள் வரை கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத் தினர். இதில், 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளில் பேராசிரியர்கள் 50 பேர் நடுவர்களாகப் பணியாற்றி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன்(SR) நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்வில் கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார், வைரம்ஸ் பள்ளி நிர்வாகி சுப்பிரமணியன் வைரம்ஸ் பள்ளி முதல்வர்,மேலாளர், நிர்வாக அலுவலர் ஆகியோரும் கம்பன் கழக நிர்வாகிகள் ச.பாரதி, கல்வியாளர் பி. எஸ். கருப்பையா, சி. கோவிந்தராஜன், கறு.ராமசாமி,காடுவெட்டி குமார், ஆர்,கருணாகரன், முனைவர் முருகையன், நிலவை பழனியப்பன், செல்லத்துரை ,பழனிச்சாமி,வள்ளியம்மை சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அடுத்தமாதம் நடைபெறவுள்ள கம்பன் பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நகர்மன்றத்தில் 48 ஆவது கம்பன் பெருவிழா அடுத்தமாதம் 10 நாட்கள் நடைபெறுகிறது.