Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

புதுக்கோட்டை கம்பன் கழக 48 -ஆவது ஆண்டு விழா தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கம்பன் பெருவிழா

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 48 -ஆவது  ஆண்டு கம்பன் பெருவிழா  தொடக்க விழா(14.7.2023) வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அமெரிக்காவின்  மேரி லேண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத்துறை  துணை செயலர்   ராஜன் கே. நடராஜன் தலைமை வகித்துப் பேசியதாவது:
புதுக்கோட்டை
கம்பன் விழாவில் பேசுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ராஜன் கே. நடராஜன்
 18 -ஆம் நூற்றாண்டிலேயே என்றைக்கும் மனித குலத்துக்குத் தேவையான முத்தான கருத்துகளைத் தொகுத்து ராமாயணத் தைப் படைத்திருக்கிறார்.  கம்பன் ராமாயணத்தை ஓர் இலக்கியமாக மட்டுமே படைக்கவில்லை. மாறாக, மக்களின் வாழ்வியலுக்கான காவியமாக ராமாயணத்தைப் படைத்திருக்கிறார்.  ராமாயணத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். உலகெங்கும் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.
புதுச்சேரி கம்பன் கழகச் செயலரும் முன்னாள் பேரவைத் தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து பேசியதாவது:
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கம்பன் விழாவில் பேசுகிறார், புதுச்சேரி கம்பன் கழக செயலர் வே.பொ. சிவக்கொழுந்து

உலகெங்கும் கம்பன் விழாக்கள் ஏதோ சம்பிராதயமாகவோ, மகிழ்ச்சிக்காகவோ நடத்தப்படுவதில்லை.சான்றோர்களை மரியாதையாக நடத்தும் பாங்கு எதுவும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை. 

இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அறிவியலை அறிந்திருக்கிறார்கள், ஆனால், அறிவால் நிறைந்திருக்கிறார்களா என்றால் இல்லை.இதனை மாற்றுவதற்காகத்தான் கம்பன் விழாக்கள் உலகெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
கள்ளிப்பட்டி கம்பன் கழகத் தலைவர் காகுத் கார்த்திகேயன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ஜி.ஏ. ராஜ்மோகன், டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன்  வரவேற்று மரியாதை செய்தார்.
இதைத்தொடர்ந்து, ‘கம்பன் யார்?’ என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்குக்கு இலங்கை ஜெயராஜ் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை
கம்பன் பெரு விழாவில் பேசுகிறார், கம்பவாதிரி இலங்கை ஜெயராஜ்
‘கம்பன் மனிதனே’ என்ற தலைப்பில் பே.சே. சுந்தரம், ‘கவிஞனே’ என்ற தலைப்பில் கு. பாஸ்கர், ‘சித்தனே’ என்ற தலைப்பில் ரா. சம்பத்குமார் ஆகியோரும் பேசினர்.
புதுக்கோட்டை
கம்பன்பெருவிழாவில் பங்கேற்ற சான்றோர்கள்
முன்னதாக கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் எம்.ஆர்.எம். முருகப்பன் வரவேற்றார்.. முடிவில் இணைச் செயலர் வெ. முருகையன் நன்றி கூறினார்.விழாவில், இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ச்சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top