Close
மே 23, 2025 5:31 மணி

புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவின் 4 -ஆம் நாள் விழா

புதுக்கோட்டை

கம்பன் பெருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்வில் பேசுகிறார், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார்

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்)  திங்கள் கிழமை  (ஜூலை 17)  மாலையில் நடைபெற்ற கம்பன் பெருவிழாவின் 4 -ஆவது நாள்  நிகழ்வுக்கு குடுமியான்மலை  சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை முதன்மை செயலாக்க இயக்குநர் டாக்டர்.ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

வடக்கு மாவட்டச் செயலாளர் செ.ப.பாவாணன், தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர்,  ப.சசி கலைவேந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முத்துப்பிள்ளை கேண்டீன்  எம்.கர்ணன், ஏ.வி.எம்.நல்லையா ஆர்த்தி ஹோட்டல்  என்.குமரகுரு, கட்டுனர் சங்க மாவட்டத் தலைவர் வி.டி.தாமரைச்செல்வன். மாவட்ட வர்த்தகர் கழக துணைத்தலைவர் ஹாஜி. எஸ்.ஏ.அசரப்அலி,

சிறுதொழில் அதிபர்கள் சங்க தலைவர்  எஸ்.ராஜ்குமார்,  வடகாடு ஒப்பந்தகாரர்ப.குணசேகரன்,  ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ் அ.சுரேஷ்,  கே.ஆர்.எஸ். ஸ்போர்ட்ஸ் கே.ஆர்.சேகர்,  மாவட்ட வர்த்தகக்கழக துணைத்தலைவர் கே.எஸ்.முகமது இக்பால், வீ.ஜெ அரிசி ஆலை வீ.ஜெயராமன் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் ஆசிரியர் கழகத் தலைவர் கு.ம.திருப்பதி வரவேற்றார். சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் நடைபெற்ற நற்றமிழ் முற்றம் நிகழ்வுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர், வீ.கோவிந்தராஜுலு தலைமை வகித்தார்.

மதுரை மூத்த வழக்கறிஞர் ஐ.இருளப்பன்  , வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டலத் தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், மாவட்ட வர்த்தகர் கழகத்தலைவர் ஹாஜி. என்.சாகுல் ஹமீது,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டத் தலைவர் வி.ஸ்ரீதர்,

புதுக்கோட்டை
கம்பன் கழக விழாவில் பேசிய மாவட்ட வர்த்தகர் கழகத்தலைவர் சாகுல் அமீது

அறந்தாங்கி வர்த்தகர் சங்கம் தலைவர் எஸ்.காமராஜ்,  ஆதிகாலத்து அலங்கார மாளிகை அ.ப.ஜெயபால், ஆலங்குடி அனைத்து வியாபரிகள் சங்கம் தலைவர்,  மெ.அ.த. மனமோகன், பொன்னமராவதி வர்த்தகள் சங்கம் தலைவர் எஸ்.கே.எஸ்.பழனியப்பன்,  மாவட்ட வர்த்தகர் கழக செயலாளர் சாந்தம் எஸ்.சவரிமுத்து, திருக்குறள் கழகம் தலைவர் க. ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை
கம்பன் பெருவிழாவில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி

உத்தமபாளையம் முனைவர் மு.அப்துல் சமது-கம்பனில் சமூக அழகியல்.தஞ்சாவூர் முனைவர்.இரா.கலியபெருமாள்- ஏழை ஏதலன். சென்னை மை.பா.நாராயணன்- மானுடத்தின் மகத்துவங்கள்  தலைப்புகளில் உரையாற்றினர்

தொல்லியல் ஆய்வுக் கழகம் இணைச்செயலர் பீர் முகமது வரவேற்புரையாற்றினார்.முனைவர் லெட்சுமி அண்ணாமலை நன்றி கூறினார்.

கம்பன்கழகத்தலைவர் ச. இராமச்சந்திரன், செயலாளர் ரா. சம்பத்குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top