Close
நவம்பர் 24, 2024 3:22 காலை

மாணவர் அரங்கம், வழக்காடு மன்றம் என களை கட்டிய 8 -ஆவது நாள் கம்பன் பெருவிழா

புதுக்கோட்டை

கம்பன் பெருவிழாவில் பேசுகிறார், முன்னாள் துணை வேந்தர் சொ. சுப்பையா

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்)  (ஜூலை 21)  மாலையில் நடைபெற்ற கம்பன் பெருவிழாவின் 8 -ஆவது நாளான வெள்ளிக்கிழமை  மாலை  5.30 மணிக்கு நடைபெற்ற  மாணவர் அரங்கம் நிகழ்வுக்கு, பாரதி மகளிர் பொறியியல் கல்லூரி தாளாளர் ந, கனகராஜ் தலைமை வகித்தார்.

பிவிஆர் நிறுவனங்களின் தலைவர் பி.வி.ஆர். சேகரன் வாழ்த்துரை வழங்கினார்.

ஸ்ரீ பாரதி மகளிலை அறிவியல் கல்லூரி தாளாளர், லியோ பெலிக்ஸ் லூயிஸ்ஸ ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்கள் நிர்வாக அறங்காவர்   ஆ. கிருஷ்ணமூர்த்தி, சுவாச நோய் நிபுணர் டாக்டர் பி.தனசேகரன், மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனிதா தனசேகரன், விவசாயிகள் சங்கம் வழக்கறிஞர் அ. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொருள்: கம்பன் காப்பியத்தில் நம் நெஞ்சம் நிறைந்தது பெண்மையின் மேன்மையா? ஆண்மையின் பெருமையா?- என்ற தலைப்பில் சென்னை குரோம்பேட்டை கம்பன் கழக செயலாளர்  பத்மா மோகன்  நடுவராக இருந்த மாணவர் அரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை
கம்பன் பெருவிழாவில் நடைபெற்ற மாணவர் பட்டிமன்றம்

இதில், பெண்மையின் மேன்மையே!  என்ற தலைப்பில் நா. கலைச்செல்வி, ஆஷா பானு, சித்தனா,  ஸ்ரீ லெட்சுமி ஆகியோரும்.

ஆண்மையின் பெருமையே! என்ற தலைப்பில்  செயலெட்சுமி, ஷெரின்ஷபானா, மேனகா,  புவனேஸ்வரி ஆகியோரும் பேசினர்.

முன்னதாக, ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் செ. கவிதா  வரவேற்றார்.  ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரி முனைவர் முனைவர். மு.கீதா நன்றி கூறினார்.

இதையடுத்து இரவு 7 மணியளவில் நடைபெற்ற வழக்காடு மன்ற நிகழ்வுக்கு  அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்து உரையாற்றினார்.

தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்  முனைவர் சி.அமுதா வாழ்த்துரை வழங்கினார்.

பிஎஸ்கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.கருப்பையா, பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம்  இயக்குநர் அ.பழனிச்சாமி, அறந்தாங்கி நைனா முகமது கல்லூரி முதல்வர் முனைவர். சி.திருச்செல்வம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதையடுத்து, கற்பனைத் தேர் ஓட்டிய கம்பனும் குற்றவாளி யே என்ற தலைப்பிலான வழக்காடு மன்றத்துக்கு தென்காசி  முனைவர் எம்.ராமச்சந்திரன் நடுவராக இருந்தார்.

புதுக்கோட்டை
கம்பன் பெருவிழாவில் நடைபெற்ற பட்டிமன்றம்

திருவரங்கம் முனைவர் ந.விஜயசுந்தரி வழக்குத் தொடுக்கும் அணியில்  இருந்து பேசினார். திருச்சிராப்பள்ளி   முனைவர் இரா.மாது, வழக்கை மறுக்கும் அணியிலிருந்து பேசினார்.

முன்னதாக இணைச்செயலாளர் முனைவர் வெ.முருகையன் வரவேற்றார். விழாக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். காசிநாதன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கம்பன் கழகத்தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top