Close
நவம்பர் 21, 2024 9:09 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.., பெருமாள் முருகனின் மாதொருபாகன்

அலமாரியிலிருந்து

பெருமாள் முருகனின் நாவல் விமர்சனம்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்..,
பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்கிற புதினம்.., குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதை சாதிய ஒடுக்குமுறை நிறைந்த ஒரு சமூகம் எதிர்த்து அந்த தம்பதியரை அழிப்பதையும் பற்றிய கதை ஆகும். கதையின் பின்புலம் திருச்செங்கோடு,கோவை வட்டத்தில் உள்ள தலித் மக்களை சுற்றி. கதையின் முக்கிய மாந்தர்கள்
பொன்னா மற்றும் காளி இரண்டு பேரையும் சுத்தி தான் கதையே . குழந்தை இல்லங்கிறதை தவிர்த்து அவர்கள் ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கும் புரிதல் நம்மை பொறாமைப்பட வைக்கிறது. ஆனால் சுத்தி இருக்கின்ற மக்கள் அவங்க உழைப்பையும், பிள்ளை இல்லாத குறையையும் முடிச்சு போட்டு பேசும்போது நமக்கும் வலிக்கிறது. பொன்னாவும் காளியும் ஒவ்வொரு சாமிக்கும் நேர்த்திக்கடன் செய்யும் போது, அவங்க வேண்டுதல் பலிக்காதான்னு நமக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால் ஏமாற்றம்தான். அதோடு மத்தவங்களோட ஏச்சும் பேச்சும் ரொம்ப கொடுமை. நகரத்தில் பக்கத்து வீட்டுல இருப்பவர்களே தெரியாம வாழுற நமக்கெல்லாம், கிராமத்து வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். மெல்லவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் பெண்ணாக சீறும்போது ரொம்ப பாவமா இருக்கும். உள்ளத்தை பிழிந்து நெகிழ வைக்கும் எழுத்து நடை. கடைசியிலே குழந்தைக்காக பெத்தவங்க எடுத்த முடிவினால் இந்த ரெண்டு உசிரும் சின்னாபின்னம் ஆவது தான் கதை.

பெண் இனத்தையும் ,குழந்தைக்கான முறையற்ற குடும்ப உறவையும் தவறாக சித்தரிக்கும் விதமாக எழுதியிருக்கின்றார் என்கிற சர்ச்சை, குறிப்பிட்ட கோவில் திருவிழா நாளில் யாரும் யாருடன் வேண்டுமானாலும் இணையலாம் என்ற கருத்தால் சர்ச்சை.., மற்றொன்று அந்த திருவிழா நாட்களில் ஊரில் உள்ள அனைத்து பெண்களும் நம்மை போல தான் என்று.., வேசியர் வசிக்கும் தெருவில் இரண்டு பெண்கள் பேசுவது போன்ற வரிகள்.
இவை தான் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது .எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
பேச்சு சுதந்திரத்தை போல கருத்து சுதந்திரமும் ஒவ்வொருவரின் அடிப்படை சுதந்திரம்னு சொல்லி எதிர்ப்பாளர்களின் தலையில் குட்டு வைத்தது நீதிமன்றம்.
தமிழ் நாவல் உலகம் இதுவரை பதிவு செய்யாத பக்கத்தை பதிவு செய்தவர் பெருமாள் முருகனை …..இதற்காக தமிழலகம் பாராட்ட வேண்டும்.

இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top