Close
செப்டம்பர் 19, 2024 7:06 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”

அலமாரியிலிருந்து

நாஞ்சில்நாடனின் "தலைகீழ் விகிதங்கள்" நாவல் விமர்சனம்

தலைகீழ் விகிதங்கள் –  இது நாஞ்சில் நாடனுக்கு முதல் நாவல்.  வேலையின்மை தரும் உறவு சிக்கல்களை யதார்த்தமாக சொல்கிறது  இந்நாவல்.

படித்து வேலையில்லாத இளைஞனின் மன நெருடலை அழகாக சித்திரித்திருக்கிறார். அவனுள் இருக்கும் கோபம், வருத்தம், குமுறல், காமம், சந்தோசம் என எல்லா ரசங்களை யும் ஒரு புதினத்தில் படைத்திருக்கிறார்.

குத்தி பேசும் மாமியார், சிறு வயதாயினும் அறிவுடன் செயல்படும் நாத்தனார், அவனுக்காக பரிதாபப்படும் நண்பன், அவன் உள்ள குமுறல் புரிந்தும் கோபத்திற்கு பயப்பட்டு பேச முடியாமல் துடிக்கும் அம்மா என நல்ல பத்திரங்கள் பல.

சிவதாணு கதை நாயகன். ஏழைக் குடும்பம். அவன் படித்து முன்னேறி விட்டால் குடும்பமே முன்னேறி விடலாம் என்னும் நம்பிக்கையில் படிக்க வைத்தால் படித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை.

அவன் குடும்பத்தின் வறுமை கருதி ஒரு பணக்கார பெண் பார்வதியை மணக்கிறான். அவள் தந்தை பணி ஏற்பாடு செய்து விடுவார் என்று சொன்னதை நம்பித் தான் மணக்கி றான். பணத்துக்கும் வறுமைக்கும் தன்மானத்துக்கும் இடை யே மாட்டித் தவிக்கிறான்.

சிவதாணு ரொம்ப ஒழுக்கமான பையனாக நடந்து கொள்வ தை ஆசிரியர் “தலையைத் தொங்கப் போட்டு நடக்கும் செம்மறியாட்டுக் கூட்டத்தில் இரண்டு அல்லது மூன்று கொம்பு முறுகிய செம்மறி கிடாய்கள் கம்பீரமாக நடந்து வருவது போல” என்கிறார்.

வளைந்து கொடுப்பதில் தான் வாழ்க்கையின் வெற்றி என்று அறிஞர் சொன்னதைச் சொல்லி வளைந்து கொடுத்தல் ஒரு பக்கமாக இருந்தால் நாளடைவில் வளைந்து கொடுக்கவே தேவையில்லாமல் கூனலாகிப் போகாதா ? எனக் கேட்கிறார் ஆசிரியர்.  நியாயம் தானே? வளைந்து கொடுத்தல் இரு பக்கமாய் இருக்க வேண்டும் என்பதை இதை விட அழுத்த மாய் பதிய வைக்க முடியுமா?

நாவலில் நாம் மிகவும் ரசிக்க ஒரு வரி உண்டு. ” உள்ளம் என்ற ஒன்று நந்தியாவட்டைப் பூ போல வெண்மையும் மென்மையும் கொண்ட ஒன்று இல்லாமலிருந்தால்”  திருமணமான ஒரு இருபத்து மூன்று வயது இளைஞனின் மன அவலங்களை இதில் பிரதானப்படுத்தியிருக்கிறேன். அவன் உணர்ச்சிகளை முழுமையாகக் கொண்டுவர முயன்றிருக்கிறேன்.

அதில் நான் வென்றாலும் தோற்றாலும், அது முடிந்து போன கதை என்கிறார் நாஞ்சில் நாடன். ஆசிரியர் வென்று விட்டார் என்று சொல்ல வேண்டும். 40+ ஆண்டுகள் கழித்தும் இந்த நாவல் வாசிக்கப்படுவதே அதன் வெற்றிக்குச் சான்று.

சிவதாணுவின் பாத்திர படைப்பு. எப்பேற்பட்ட‌ மனிதனும் ஒரே மாதிரி எப்போதும் இருப்பதில்லை, எதிர்வினையாற்று வதில்லை. ஒவ்வொருவர் பார்வையில் அவன் வேறுபடுவான். சந்தர்ப்ப சூழ்நிலை, வாழ்க்கைப் போக்கு, குடும்பச் சிக்கல், புறக்கணிப்பு என எத்தனையோ மாற்றங்களை ஒருவன் சந்திக்கிறான்.

இது ஒவ்வொன்றிற்கும் ஒரே மாதிரி எவனும் மறுவினையாற்ற மாட்டான். உணர்ச்சி கொந்தளிப்பு, கழிவிரக்கம், கையாகாலத்தனம், கோபம் என சிவதாணுவின் அத்தனை பரிமாணங்களையும் இந்த நாவலில் நாம் பார்க்க முடிகிறது. மனைவியிடம் கோபப்படுகிறான்; பின், அதை நினைத்து வருந்தி, சே! ஏன் அநாவசியமாக அவளிடம் கோபப்பட்டோம்; அவளும்தான் என்ன செய்வாள் என்று வருந்துகிறான். இதுபோல நிறைய இடங்கள்.

சிவதாணு என்ற இளைஞனின் அட்டகாசமான கதாபாத்திர ஆய்வு. இதைத்தாண்டி, நாஞ்சில் வெள்ளாளர் வாழ்க்கை முறை, கலாச்சாரம், கிராமத்து நையாண்டி, அப்போதைய சமூகப்பின்னணி, சடங்கு சம்பிராதாயங்கள் ஆகியவற் றையும் தொட்டுச் செல்கிறது; விமர்சிக்கவும்படுகிறது.

விமர்சகர்:  சண்.சங்கர்-லண்டன்-இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top