Close
ஏப்ரல் 4, 2025 11:55 காலை

சார்லி சாப்ளின் பிறந்த நாளில்.. இங்கிலாந்திலிருந்து சங்கர்..

சார்லி சாப்ளின்

சார்லிசாப்ளின் பிறந்தநாளில்

சார்லி சாப்ளின் பிறந்த நாளில்..,

லண்டனில் உள்ள வால்வோர்த் நகரத்தில் பிறந்து, பேசா படங்களின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி, அமெரிக்க சினிமா வரலாற்றில் இன்றளவும் பேசபடுகிற சார்லி சாப்ளினின்…,
இதயத்தை தொடும்படியான மூன்று வாக்கியங்கள்..,

இந்த உலகில் ஏதும் நிரந்திரமில்லை.., நமது பிரச்னைகள் உட்பட ! வாழ்வின் மோசமாக கழிந்த ஒரு நாள் என்பது, நாம் சிரிக்க மறந்த, மறுத்த அந்த நாள் தான் !!  எனக்கு மழையில் நனைந்தபடி நடக்க பிடிக்கும், அப்போது தான் எனது கண்ணீரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது!!!

We think too much and feel too little என்று அவர் சொன்ன வாசகத்தில் நிதர்சனம் உண்டு.உண்மையில் நாம் நிறைய யோசிக்கிறோம், குறைவாக உணர்கிறோம்.ஆனால், பிறரின் சிந்தனையில் நம்மை மறந்து பிரமிப்படைகிறோம்.
நமக்காக அவர் நிறைய சிந்தித்து எடுத்த சில படங்களை பார்த்து, நாமும் நிறையவே உணர்வுபூர்வமாக உருகிபோயிருக்கிறோம்.

சார்லி சாப்ளின்
சார்லிசாப்ளின் மீசை

சார்லி சாப்ளின் மீசை: இந்த மீசை துடிக்கும் போதெல்லாம் மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அடால்ப் ஹிட்லர் மீசை:இந்த மீசை துடிக்கும் போதெல்லாம் மக்கள் விழுந்து விழுந்து இறந்தார்கள்.

சார்லி சாப்ளின் மீசை:இந்த மீசைக்கு நன்கு நடிக்க தெரியும்

அடால்ப் ஹிட்லர் மீசை:இந்த மீசைக்கு நன்கு அடிக்க தெரியும்.

சார்லி சாப்ளின் மீசை:இந்த மீசைக்கு மக்களின் நாடி துடிப்பை அதிகரிக்க தெரியும்.

அடால்ப் ஹிட்லர் மீசை:இந்த மீசைக்கு மக்களின் நாடி துடிப்பை நிறுத்த தெரியும்

சார்லி சாப்ளின் மீசை:இந்த மீசை அனைத்து தேசத்திலும் புன்னகையை பிறக்க செய்தது.

அடால்ப் ஹிட்லர் மீசை:இந்த மீசை பல தேசத்தின் புன்னகையை மறக்க செய்தது.

சார்லி சாப்ளின் மீசை:இந்த மீசை அன்பு.

அடால்ப் ஹிட்லர் மீசை: இந்த மீசை அம்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top