Close
செப்டம்பர் 19, 2024 11:18 மணி

அலமாரியிலிருந்து… வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்…

இலக்கியம்

அலமாரியிலிருந்து புத்தகம்... கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.

பிற கவிஞர்களால் அதிகம் பதிவுசெய்யப்படாத, அடித்தட்டு மக்களையும், தங்க இடமின்றித் திரிவோரையும், உழவர் பெருமக்களையும், சிறு வணிகர்களையும் பாடுபொருளாக் கிப் பெருமை சேர்த்தவர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.

இயற்கையன்னையின் மீது தணியாத காதல் கொண்ட, பிரிட்டனில் ஆங்கில காதல் இயக்கத்தில் முதல்வர் என்று சொல்லலாம். அவரின் டஃபோடில் கவிதை ஒரு அலசல்…

Daffodils
That floats on high o’er vale and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils:
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

வேர்ட்ஸ்வொர்த் தன்னை ஒரு பள்ளத்தாக்கில் மிதக்கும் மேகம் போல தனிமையாக, அவரது சகோதரர் இறந்துவிட்ட பிறகு, தான் ஒரு தனித்தீவில் விடப்பட்டது போல சோகமாக உணர்கிறார். நடந்து செல்கையில் அவர் ஏரியின் அருகே மரங்களின் அடியில் மஞ்சள் டஃபோடிலேஸ்களை எதிர்கொள்கிறார். அடிக்கும் தென்றல் காற்றால் அவை அங்கும் இங்கும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகின்றன.

Continuous as the stars that shine And twinkle on the milky way,
They stretched in never-ending line,
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.

வசந்த காலத்தில் டஃபோடில்ஸ் எவ்வளவு ஆச்சரியமாக இருந்தது என்பதை, இரவு வானத்தில் பிரகாசித்து மின்னும், நட்சத்திரங்களைப் போன்ற பூக்களாக விவரிக்கிறார். அவை தலை அசைத்து நடனமாடிக்கொண்டிருக்கின்றன. இந்த அழகான பூக்கள் ஒரு போதும் முடிவில்லாத வரிசையில் நிற்பதாக வேர்ட்ஸ்வொர்த் வெளிப்படுத்தி, பத்தாயிரம் பூக்களை முழுவதுமாக, ஒரே பார்வையில்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு மாயையை உணர்வதாகவும் சொல்கிறார்.

The waves beside them danced; but they,
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
In such a jocund company:
I gazed-and gazed-but little thought,
What wealth the show to me had brought:

பூக்களுடன் சேர்ந்து, ஏரியின் நீரும் எப்படி நகர்ந்தது, அவை யிரண்டும் நடனத்தில் எப்படி போட்டி போட்டுக் கொண்டன என்பதை சிலாகித்து சொல்கிறார். ஆனால் அங்கே மகிழ்ச்சி யான பூக்கள் வென்றது, வண்ண மயமான ஏரி இழந்தது. அவர்களின் விளையாட்டுத் தனத்தைக் கண்டறிந்து, அதில் தன்னை இணைத்து கொள்ள முடியாமல் இருக்க திணறு கிறார்.

அவரது சோகமான மனநிலை எவ்வாறு மகிழ்ச்சியாக மாறியது என்று யோசித்துக்கொண்டே ஆசிரியர் பூக்களை யும் ஏரியையும், ஏற இறங்க பார்த்துக்கொண்டே இருந்தார். டாஃபோடில்களின் ஏரினுடான நடனம் அவருக்கு மறுக்க முடியாத ஒரு செல்வத்தை வழங்கின. மயக்கும் அந்த பூக்கள் அவரது இதயத்தில் எப்படி ஒரு இடம் பெற்றன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஆனால் உணர முடிந்தது.

For oft, when on my couch I lie,
In vacant or in pensive mood,
They flash upon that inward eye,
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

அன்றைய நாளில் டாஃபோடில்ஸ் நடனமாடுவதைப் பார்த்த பின் ஆசிரியர் என்ன இன்பம் பெற்றார் என்பதற்கான வரிகள் இவை. வேர்ட்ஸ்வொர்த் சோகமாகவோ அல்லது தனியாகவோ உணர்ந்த போதெல்லாம், நடனமாடும் டஃபோடில்ஸின் பிம்பம் அவரது நினைவுக்கு வந்தது, அவர் வாழ்க்கையின் புதையலை மீண்டும் பெற்றது போல இருந்தது என்கிறார். தனிமை எவ்வளவு மதிப்புமிக்கது! முடிவில், டாஃபோடில்ஸின் நடனத்தில் சேருவதில் ஆசிரியரின் இதயம் திருப்தி அடைந்ததாக முடிக்கிறார் கவிதையை..

‘I Wandered Lonely as a Cloud’ என கவிதைக்கான இன்னொரு தலைப்பாக சொன்னது சாலப்பொருத்தம்.

இங்கிலாந்திலிருந்து…சங்கர்🎋

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top